பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் -- =__ 245 == காண்டி-முன்னில் ஒருமை வினைமுற்று. காண்+ட்+இ. கர்ண்ட் பகுதி, ட்-எழுத்துப்பேறு, இ-முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி. ஆல்-அசை நிலை அனுப்-அன்னய் என்பதின் இடைக்குறை. 9. அனுமனைக்கண்ட சீதை ஐயுற்றுத் தெளிதல் என்றவன்................... .....................என்ன சொற்பொருள் என்று அவன் இறைஞ்ச - என்று இவ்வாறு கூறி அனுமான் | வணங்க, நோக் கி - சீ ைத அ வ னை ப் பார்த்து, இரக்கமும் முனிவும் எய்தி -கரு யையும் கோபத்தையும் ஒருங்கு அடைந்து, நின்றவன் நிருதன் அல்லன் -எதி ரில் நிற்பவன் அரக்கன் அல் லன், நெறி நின்று-நல்லொழுக்கத்தில் தவருது நின்று, பொறிகள் ஐந்தும் வென்றவன்ஐம்பொறிகளையும் வெற்றி கொண்டவனுவான், அல்லன் ஆகில் - அவ்வாறில்லை யென்ருல், விண்ணவன் ஆகவேண் டு ம் - தேவனக இருக்கக் கூடும், ( ஏனெனில் ) நன்று உணர்வு உரையன் - நல் லறிவைப் பு ல ப் ப டு த் து ம் சொற்களையுடையவகை இருக் கின்ருன், | துரயன்-துரய மனமுடையவகை இருக்கின்ருன், நவை இலன் - குற்றமி ல் லா த வனுக்வும் இருக்கின்ருன், என்ன - என்றெண்ணி, கருதது அனுமன் தொழுது நிற்பதைக் கண்ட சீதை இவன் அரக்கன் அல்லன் , பொறிகளை வென்ற முனிவனுவன் ; இல்லையா ல்ை தேவனுக இருக்கவேண்டும். ஏனெனில் இவன் நன் மொழி களையும் தூய மனத்தையும் குற்றமில்லாமையும் உடையவகைக் காணப்படுகிருன் என்று எண்ணினுள். விளக்கம் அனுமான் இராமன் பெயரைச் சொன்னமையால் இரக்கமும், அவன் இராவணனே என்று ஐயுற்றமையால் முனிவும் எய்தினுள் சீதை. நற்பண்புகள் உடையவனுகத் தோன்றுதலினல் நிருதன் அல்லன் என முடிவு கட்டுகிருள். அப்படியானல் அவன் யார் ? ஒன்று முனிவகை இருக்கவேண்டும். அல்லது தேவகை இருக்க வேண்டும் என்றெண்ணுகிருள். *