பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=2. 5. 4 இடைக்காலச் செய்யுள்

  • இலக்கணம் தீட்டரிய-திட்ட-அரிய ; அகரம் தொகுத்தல் விகாரம். நீட்டிதென-நீட்டு-இது--என.

வாணுதலி-வாள்-நுதலி. 18. மோதிரத்தைக் கண்ட சீதை மகிழ்தல் இறந்தவர்......................................செய்கை சொற்பொருள் நல் துதலி இச்செய்கை - அழகிய நெற்றியையுடைய சீதையின் (மோதிரத்தைப் பெற்றதன லாகிய) இம்மகிழ்ச்சியை, இறந்தவர். (நல்லன செய்யா மல்) காலங் கடந்தவர்கள், பிறந்த பயன்- பிறவிப் பயனை, எய்தினர் கொல் பெற்ற மகிழ்ச்சிக்கு ஒப்பாகும் என்று சொல்வேனே, மறந்தவர் - ஒன்றை மறந்துவிட் டபெIT, அறிந்து - என்கோ - உணர்வு வ ந் த ன ர் கொல் என்கோ - அவ்வறிவு வந்து கூடப் பெற்றவரின் மகிழ்ச் சிக்கு ஒப்பாகும் என்று சொல் வேனே, துறந்த உயிர் - நீங்கிய உயிர், வந்து - திரும்ப வந்து, இடை தொடர்ந்தது கொல் என்கோ - உடம்பில் சேர்ந்த தலைான மகிழ்ச்சிக்கு ஒப்பா கும் என்று சொல்வேனே, திறம் திரிவது என்னை கொல் - சீதையின் மகிழ்ச்சித் திறனைத் மீண்டும் நினைவுண் - தெரிந்து சொல்வது எவ்வாறு. கருதது மோதிரத்தைக் கண்ட சீதையின் மகிழ்ச்சியை, இறந்தவர் பிறந்த பயனை அடைந்ததால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் செர்ல்வேன, அல்லது மறந்தவர் மீண்டும் அந்நினைவு வரப்பெற்ற மையால் பெறும் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்வேன அல்லது பிரிந்த உயிர் திரும்ப வந்து சேர்ந்ததால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்வேனு, எவ்வாறு சொல்வேன் என்று கவி கூறு கிரு.ர். டாகி, விளக்கம் பிறந்த பயனின்றி வீணே காலங் கழித்தவர் பிறந்த பயன் பெற்றது போலவும், மறந்தவர் மீண்டும் மறந்த அரிய பொருள் ஒ:ன்விற்கு வரப் பெற்றது போலவும். இறந்த உயிர் மீண்டும் உடம் பில் வந்து சேரப் பெற்றது போலவும் சீதை இராமனது மோதிரத் தைப் பெற்று மகிழ்ந்தாள் என்பதாம் இப்பாடல் கவிக் கூற்ருக அமைந்தது. - இலக்கணம் கொல்-அசைநிலை. என்கு-தன்மை ஒருமை வினைமுற்று. என்+கு.