பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடற் புராணம் 375 கருதது உன் பொருட்டால் நீ எய்த பாம்புக் கன அருச்சுனன்மேற் படாதவாறு செய்தவனும் நான்தான் என்று கூறி, எல்லாமாகி நிற்கும் கண்ணன் மறுபடியும் அருச்சுனன் தேர்ப்பாகனகச் சென்று அமர்ந்தான். விளக்கம் ஒரு சமயம் அருச்சுனனிடம் அக்கினிதேவன் அந்தணன் வடிவில் வந்து தனக்கு உணவளிக்குமாறு வேண்டினன். அருச்சுனன் தரு வதாகக் கூறலும், அக்கினி தேவன் தன் உண்மை உருவைக்காட்டி எனக்கு வேண்டிய உணவு இந்திரனுக்குச் சொந்தமான காண்டவ வனமேயாகும் என்ருன். அருச்சுனன் அதனை உண்ணுமாறு கூறினன். அக்கினி வனமுழுதும் பற்றி உண்ணத் தொடங் கியதைக் கண்ட இந்திரன் சீறி மழைபொழிந்து அணைக்க முற்பட் டான். அருச்சுனன் அம்பினலே கூடம் ஒன்று அமைத்து நனையா மல் பார்த்துக் கொண்டான். அப்பொழுது அந்த வனத்திலிருந்த தக்கன் என்னும் பாம்பின் மனைவி தன்குட்டியை வாயில் கவ்விக் கொண்டு தப்பியோட முனைந்தது. அருச்சுனன் அதுகண்டு அம் பெய்து அதனை நெருப்பில் வீழ்த்தினன். அசுவசேனன் என்னும் பெயருடைய அந்தக் குட்டிமட்டும் தப்பிவந்து, அருச்சுனன்மேல் பெரும்பகை கொண்டு, அம்பாகமாறிக் கன்னனிடம் புகுந்தது என்பர். * அக்கணையைக் கன்னன் அருச்சுனன்மீ கழுத்துக்குக் குறி வைத்து எய்தபோது தேர்ப்பாகனக இருந்த கண்ணன் தேரைப் பூமியில் சிறிது அழுந்தச் செய்தான். அம்பு அருச்சுனன்மேற்படா மல் அவன் தலைக்குமேலே போய்விட்டது. கோவியர் துகிலும் நானும் வளையும் நெஞ்சும் வாங்கியது கண்ணன் ஆயர்பாடியில் ஆயர்குல மங்கையரிடம் செய்த காதல் விளையாட்டு. o இலக்கணம் உரகவாளி--இருபெயரொட்டுப் பண்புத்தொகை. மட நெஞ்சு-உரிச்சொற்ருெடர். இ. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ஊமை தமிழறிந்த திருவிளையாடல் ருவிளையாடல் என்பது சிவபெருமான் மதுரையம் பதியில் செய்தருளிய திருவிளையாடல்களைக் கூறும் நூல். இத்திருவிளையா டல்களைக் கூறும் நூல் இரண்டுள. ஒன்று பரஞ்சோதி முனிவர்