பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புச் செய்யுள் வினவிடை 303 - னைத்தால், பிறருடைய செல்வ நலத்தைக் காட்டி, இவன் பொரு ளில்லாதவன் என்று அவனை அகற்றி விட்டாள். 4. சாதுவன் நாகர் வாழ் மலைப்பக்கம் சாரக் காரண மென்ன ? பொருளிழந்த சாதுவன், வாணிகத்தின் பொருட்டுக்கப்பலிற் செல்லும் வணிகர்களுடன் கப்பலிற் சென்ருன். கப்பல் திடீரெனக் கடலில் மூழ்கியது. அப்போது ஒடிந்த மரத்துண்டொன்றைப் பற்றிக்கொண்டு, அலைகள் உந்திச் செலுத்துதலிஞ்ல் அவன் நாகர் வாழ்மலைப்பக்கம் சார்ந்தனன். . 5. ஆதிரை தீப்புகக் காரணம் என்ன? வணிகர் சென்ற கப்பல் கேடுற்றதால் ஒடிந்த மரத்துண்டு களைப்பற்றிக் கரைசேர்ந்த வணிகர்களிற் சிலர் ஆதின்ரயிட்ம் மரக் கலம் உடைந்ததால் கடலுள் மூழ்கியிறந்தவர்களுடன் உன் கனவ ஆணும் இறந்து போயினன்' என்று கூறினர். அதுகேட்ட ஆதிரை வருந்தி ஊர்மக்களே! எனக்கு ஒள்ளழல் ஈமம் தருவீராக’ என்று கூறிச் சுடுகாட்டில் குழி தோண்டி, விறகடுக்கி, எரிமூட்டி, என் கணவன் புக்குழிப்புகுவேகை என்று சொல்லித் தீப்புகுந்தினள். 6. ஆதிரை தீப் புகுந்தவுடன் எவ்வாறு தோற்றமளித் தாள் ? ஆதிரை தீயிற் புகுதலும், அவள் படுத்த விறகுப் படுக்கையும், உடுத்தியிருந்த ஆடையும், நெருப்புப் பற்றவில்லை. பூசிய சந்தன மும், கூந்தலிற் சூடிய மலரும் பழையநிறம் கெடாமல், செந்தா மரை மலரில் இருந்த இலக்குமிபோல்க் காட்சியளித்தாள். 7. விரைமலர்த் தாமரை ஒரு தனியிருந்த திருவின் செய்யோள் போல இருந்தவள் யார்? உவ்மையை உவமேயத்துடன் பொருத்திக் காட்டுக. அடுக்கிய விறகில் பற்றிய நெருப்பிடையிருந்த ஆதிரை தாம ரைமலரில் இருந்த திருவைப்போல விளங்கிளுள். கொழுந்து விட்டெரியும் நெருப்பு மலர்ந்த செந்தாமரையை நிகர்க்கும் ஏரியின்மேல் அழகும் செந்நிறமும் கொண்டு அமர்ந் இருந்த ஆதிரை சிவந்த தாமரையில் இருக்கும் திரும்கள்ை கர்ப்பாள். 8. தியால் தீண்டப் பெருது யாது செய்கேன் ? என ஏங்கிய ஆதிரைக்கு அசரீரி என ன கூறியது ? தீயும் கொல்லாத தீவினையாட்டியாகிய நான் இனி யாது செய் கேன் ? என ஆதிர்ை ஏங்கலும், அசரீரி தோன்றி, ஆதிரையே ! உன் பெறுதற்கரிய கணவனை அலையானது கொண்டு செலுத்தச் சென்று நக்க சாரணர் வாழ்கின்ற மலைப்பக்கஞ் சேர்ந்து உயிருடன் இருக்கின்ருன் என்று கூறிய்து.