பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரகாண்டம் , (), 9. நின்றவன் நிருதன் அல்லன் என்று சீதை எங்ாவனம் தெளிந்தாள் ? 10. அனுமன் என்ன உதவி செய்ததாகச் சீதை கூறு கிருள்? 11. இவன் வினவுதற்குரியன் என்று சீதை ஏன் துணிந் தாள் ? துணிந்து விவிையது யாது? இம்மூன்று வினக்கட்கும், எட்டாம் வினவிற்குரிய விடை யையே பிரித்து எழுதிக்கொள்க. 12. நீ யாவன் என வினவியதற்கு அனுமன் கூறிய விடை யாது ? -- அன்னையே! இராமன் உன்னைப் பிரிந்தபின்பு தேடிப்பெற்ற நண்பனும் கதிரவன் மைந்தனும் கவிக்குல நாயகனும் ஆகிய சுக்கிரீவன் என்பவன் ஒருவன் உளான். அவன் எவ்விதக் குற்றமும் அற்றவன். அவனுக்கு முன்னேன் ஒருவன் வாலி என்னும் பெய ருடையான் உளன். அவ்வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு அரசு நல்கி அவனை நண்பனுகக் கொண்டான். அந்தச் சுக்கிரீவனுடைய ஆலோசனைச் சபையில் ஒருவகை நான் இருக்கின்றேன்; வாயு தேவ னுடைய மகன்; பெயர் அனுமான். உன் நாயகனுகிய இராமன் ஏவலால் உன்னைத் தேடி வந்து இங்குக் கண்டேன் என்று அனுமன் கூறினன். 13. வாலி யார்? அவன் எப்படிப்பட்ட வலிமையுடைய வன்? வாலி சுக்கிரீவன் உடன் பிறந்தோன். இராவணனையே தன் வாலினல் கட்டியிழுத்து, அவனுடைய வலிமை கெடுமாறு, எல்லாத் திசைகளிலும் பாய்ந்து சென்று, துன்பப்படுத்திய வெற்றியுடைய வன். தேவர்கள் வேண்டிக்கொள்ளத் திருப்பாற்கடலில் மந்தர மலையாகிய மத்தில் சுற்றிய வாசுகி என்னும் பாம்பைத் தானுெரு வனே நின்று இழுத்துக் கடைந்தவன். 14. அனுமன் தான் இலங்கைக்கு வந்ததற்கு என்ன கார ணம் கூறினன்? தாயே! உன்னைப் புன்தொழில் அரக்கன் துரக்கிச் சென்ற நாளிலே நீ ஆடையிலே முடித்து எங்கள் மலேமேல் போட்டுச் சென்ற அணிகலன்களை இராமனிடம் காட்டினேன். அதனல் அவன் அடியனுகிய என்னைத் தனியே அழைத்து நீ தென்றிசைக் குச் சென்று சீதையைத் தேடி வா’ என்று பணித்தான். அவன் ஆணையை மேற்கொண்டு உன்னைத் தேடி இலங்கைக்கு வந்தேன் என்று அனுமன் தான் இலங்கைக்கு வந்ததைக் கூறினன்.