பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 - - சிறப்புச் செய்யுள் வினவிடை == 5. இராமன் சீதையிடம் வாராமைக்குக் 35ss J 5TTLDss 55 அனுமன் கூறியது யாது ? துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் இராமன் நீ இங்கிருப் பதை அறியான். அதனுல்தான் அவன் வரவில்லை. இதற்குக் கார னம் வேறு வேண்டுமோ? அரக்கர்கள் இன்னும் சாகாமல் இருக் கிருர்களே , அது போதாதா? நீ இங்கு இருப்பதை அவன் அறிந் திருந்தால் அரக்கர்களை இந்நேரம் கொன்று குவித்திருக்க மாட் டான ? என்று காரணம் கூறுகிருன். 6. சீதை ஐயுருமல் இருக்க அனுமன் கூறிய சான்றுகள் யாவை? அன்னையே! நீ என்னைப்பற்றி ஐயுற வேண்டா. தலைவளுகிய இராமன் தந்தனுப்பிய அடையாளமாகிய கணையாழி இருக்கின் றது. மேலும் அவன் கூறியனுப்பிய அடையாள மொழிகளும் உள. அதனுல் தவருக நீ கருதவேண்டா என்று அனுமன் கூறினன். 7. இராமன் அனுமனிடம் கூறியனுப்பிய அடையாள மொழிகள் யாவை ? இராமன் கூறியனுப்பிய அ ைட யா ள மொழிகளாவன: இராம்ன் காடு செல்லும்போது சீதை, உடுத்த துகிலோடும், உயிர் 2க்க உடலோடும், எடுத்த முனிவோடும் பக்கத்தில் வந்து நின்ற தும், இராமன் நகரை விட்டு நீங்கா முன்பே அவள் கான் யாண் டையது என வினவியதும், சுமந்தரனிடம் "கிள்ளையொடு பூவை களை வளர்க்கும் விதத்தைத் தோழிகட்குச் சொல்லுமாறு சீதை சொல்லியனுப்பிய பிள்ளைமைத் தன்மையும் ஆகும். 8. சீதை அனுமனை எவ்வாறு தெளிந்தாள்? தெளிந்து என்ன கேட்டாள்? இவன் நல்வழியில் நின்று ஐம்பொறிகளையும் வென்றவன வான். அல்லது தேவனக இருக்கவேண்டும். ஏனெனில் நல்லுனர் வும், துாய உள்ளமும், குற்றமின்மையும் உடையவகை இருக்கின் முன். ஆதலால் இவன் அரக்கன் அல்லன். இவன் அரக்கனயினும் சரி, தேவனுயினும் சரி, அல்லது குரங்கினத் தலைவனுயினும் சரி, அல்லது இவல்ை விளைவது கொடுமையேயாயினும் நன்மையேயாயி னும் சரி; இங்கு என் தலைவன் பெயரைச் சொல்லி என் உணர்வை உருக்கிவிட்டான்; என்னையும் சாவாமற் காத்தான். இதைவிடச் சிறந்த உதவி யாதுளது? இவனிடம் என் உள்ளம் இரக்கம் காட்டு கிறது. மேலும் கள்ளமில்லாத் சொற்களையுடையவனாகவும், கண் என்ரீர் வார்ந்து புலம்புகின்ற சொற்களையுடையவனாகவும் காணப் படுகின்ருன். அதனால் இவன் நம்மால் வினவுதற்குரியனே எனத் தெரிந்து வீர! நீ யாவன்? என வினவுகின்ருள்.