திருவிளையாடற் புராணம் ." I. உரைத்தால் சிறந்த உரையைத் தேர்ந்தெடுப்பான். ും. சிறந்த உரையாகும். கவலையின்றி, ஐயமின்றி அவனிடம் செல்க என இறைவன் கூறியருளினன். - 4. இறைவன் உருத்திரசன்மனிடம் செல்க என்றவுடன் புலவர்கள் வினவியதென்ன? அதற்கு இறைவன் கூறிய மறுமொழி யாது? உருத்திரசன்மன் பிறந்த நாள் முதல் ஊமையாயிற்றே; அவன் எவ்வாறு உரை முடிவு காணவல்லான்? என்று புலவர்கள் கேட்ட னர். அதற்கு இறைவன் அவன் உரையைக் கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது எந்த உரைக்குக் கண்ணிர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்க்க இருக்கின்ருனே அதுவே சிறந்த உரை; ஏனையன சிறந்த, உரையாக மாட்டா. புலவர்களே! ஒருவரும் பகை கொள்ளாதீர். ஒன்று கூடி அவனை அழைத்து வந்து, நம் சங்க மண்டபத்தில் அமர்த்திப் பணிவுடன் கேளுங்கள் என்று மறுமொழி கூறினன். 5. ஊமனைப் புலவர்கள் எவ்வாறு உபசரித்தனர்? எவ் வெவர் உரைகள் சிறந்தன என்று தேர்ந்தெடுக்கப் பட்டன? - இறைவன் ஆணைப்படி அவ்வூமனை அழைத்து வந்து, சங்க மண் டபத்தில் சிம்மாசனத்தில் அமர்த்தித் துபதீபங் காட்டித் தம் உரைகளைப் புலவர்கள் படித்தார்கள். அப்பொழுது ஊமை, கீரன், கபிலன், பரணன் என்னும் மூவருடைய உரைகளைக் கேட்டுப் புளக மெய்திக் கண்ணிர் சொரிந்தான். அம்மூவருடைய உரைகளும் சிறந்தன எனத் தேர்ந்தெடுத்தனர். 6. இலக்கணக் குறிப்புத் தருக. நயந்திடக் கடவம்-உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினை முற்று. o கமலத்தாள் ஏத்தி-உவமைத் தொகை, வரனுறக் கேண்மின்--ஏவற் பன்மை வினைமுற்று. அறியா எங்தை-மரூஉ மொழி. துன்பதீபம்--உம்மைத் தொகை. 7. பிரித்தெழுதுக. தத்தம்-தம்-தம். என்றியாரும்-என்று + யாரும். சொற்றர-சொல்-தர. செட்டிக்கியாதொரு-செட்டிக்கு+யாதொரு. 8. உறுப்பிலக்கணந் தருக. மலைந்தனர்-மலை-த் (ந்)+த்+அன்+அர். மலை-பகுதி, த்சந்தி, நகரமானது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, அர்-பலர் பால் வினைமுற்று விகுதி,
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/319
தோற்றம்