பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம் , 1. சிலப்பதிகாரத்தால் பண்டைத் தமிழ் நாட்டைப் பற்றி அறிவன யாவை ? பண்டைக் காலத்தில் தென் திசையில் குமரியாறு, பஃறுளி யாறு என்னும் இரண்டு பேராறுகள் பாய்ந்தன என்றும் அந்நிலப் பரப்பில், ஏழ்த்ெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலே நாடு, ஏழ் பின்பாலே நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகரை நாடு, ஏழ் குரும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தன என் றும், அவை கடல் கோளால் அழிந்தன என்றும் சிலப்பதிகார உரை பால் தெரிகின்றது. o - 2. இறையனர் களவியல் உரையால் பாண்டிய நாட்டைப் பற்றி அறிவன யாவை ? -- பாண்டிய நாட்டைச் சேர்ந்த அப்பெரு நிலப்பரப்பின் தலை நகரம் தென் மதுரை. அந்நகரம் கடல் கோளால் அழிந்த பின்பு போடபுரம், பாண்டியர் கோநகர் ஆயிற்று. அங்கு இருந்த தமிழ்ச் சங்கத்தில், தொல்க்ாப்பியம் அரங்கேறியது. பின்பு கபாடபுரம் கடல்ால் அழிந்தமையின், இன்றுள்ள மதுரை பாண்டியர் தலைநகர மாயிற்று. இச்செய்திகளை இறையனர் களவியல் உரையால் அறி கின்ருேம். ஐ. சங்க காலத் தமிழகத்தின் எல்லை பிரிவு முதலியன வற்றை எழுதுக. சங்க நூல்களில் தமிழகத்தின் வடவெல்லை. வேங்கடமலை என்று குறிக்கப்பட்டுள்ளது. தெற்கெல்லை குமரிமுனை என்றும், கிழக்கெல்லையும் மேற்கெல்லையும் கடல் என்றும் கூறப்பட்டுள்ளன. இந்நான்கு எல்லைகட்கு உட்பட்ட தமிழகத்தில் தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு, சேர நாடு என்பன அமைந்திருந்தன. இவற்றுள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை முடி மன்னரும், பிற நாடுகளைக் குறுநில மன்னரும் ஆண்டு வந்த னர். இவர ன்றி, ஆங்காங்குக் குறுநில மன்னர் பலர், பேரரசர் ஆட் ஒக்கு ட்பட்டும் உட்படாமலும் இருந்து வந்தனர். 4. தொண் 60) I நாடு ஏது 2 அதனுள அடங்குழு மாவட் ட்ங்கள் எவை ? இந்நாட்டைப் பற்றிய செய்திகள் யாவை ? வட வேங்கடம் முதல் தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப்பகுதி தொண்டை நாடு எனப்பட்டது. இந்நிலப் பரப்பில் நெல்லுனர் மாவட்டத்தின் தென் பகுதி, சித்துார், வட ஆர்க்கடு, செங்கற்பட்டு மாவட்டங்கள், தென் ஆர்க்காடு மாவட்டத்தின் வட பகுதி என்பன அடங்கும். திருப்பதி மலைத் தொடரும், கிழக்