உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" ' "./ சிறப்பு உரைநடை விவிைடை குத் தொடர்ச்சி மலையும் தொண்டை நாட்டில் மலை வளத்தினை உண்ட்ாக்கின. சங்க காலத்தில் இந்நாட்டின் பெரும் பகுதி காடா கவே இருந்ததென்றும் இதனை முதன் முதல் கைப்பற்றிய கரிகாற் சோழன், காடு கெடுத்து நாடாக்கினன் என்றும் தமிழ் நூல்கன் கூறுகின்றன. 5. சோழ நாடு எது ? எவ்வெவ் மாவட்டங்கள் இதில் அடங்கும் ? இதற்கு வேறு பெயர் யாது? தில்லைக்கு வடக்கேயுள்ள வெள்ளாற்றுக்கும் தஞ்சை மாவட் டத்துத் தென்கோடியிலுள்ள வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி, சோழநாடு எனப் பெயர் பெற்றது. இது தஞ்சா ஆர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களையும், தென்ஆர்க்கர்டு மாவட் ட்த்தின் தென் பகுதியையும் கொண்ட நிலப்பகுதியாகும். மலை வளம் அற்ற இப் பகுதியில் காவிரியும், அதன் கிளையாறுகளும் பாய்ந்து இந் நாட்டை வளப்படுத்தி யுள்ளன. இவ் வளத்தால் இந்நாடு முழுவதிலும் பசுமையான வயல்களும், சோலைகளும், தோட்டங்களும் நிறைந்துள்ளன. பொன் இகாழித்துவரும் காவிரி பாயப் பெற்ற் காரண்த்தால், இந்நாடு பொன்னி நாடு என்று பெயர் பெற்றது. 6. வளவர் எனப்படுபவர் யாவர் ? அப் பெயர் பெறக் காரணம் என்ன ? சோழநாட்டைச் சோழர் என்னும் அரசமரபினர் ஆண்டு வந்த னர்; நாட்டை மேலும் மேலும் ஆளப்படுத்திய கார்ணத்தால், இவர்க்ள் வளவர் எனப் பெயர் பெற்றனர். சோழ வேந்தருட் இறந்தவன் கரிகாற் பெருவளத்தான் என்பவன். 7. சிலப்பதிகாரத்தாலும் பட்டினப்பாலேயாலும் சோழ நாட்டின் தலைநகரங்களைப் பற்றி என்ன அறியலாம்? காரக் காலத்தில், காவிரிப்பூம்பட்டினம் தலை நகரமாகவும், துறைமுக நகராகவும் விளங்கியது. அந்நகரம் கி. பி. முதல் இரண்டு நாற்ருண்டுகளில், கடல் வாணிதத்தில் சிறந்திருந்தது என்பதைச் சிலப்பதிகாரத்தாலும், பட்டினப் பாலேயாலும் அறியலாம். 8. பாண்டிய நாடு எது ? அதைப்பற்றிய குறிப்புக்கள் யாவ்ை சாணக்கியர் பொருள் நூல் பாண்டிய நாட்டைப் பற்றி என்ன கூறுகின்றது ? இன்றுள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட் டங்க்ளும், நாஞ்சில் நாடும் சேர்ந்த நிலப்பகுதியே சங்ககாலப் பாண்டிய நாடாகும். இந்நாட்டில் மலைவளமும் உண்டு. வையை யாறும் தாமிரவருணி யாரும் இந்நாட்டை ஒரளவு வளப்படுத்தி