"... (l சிறப்பு உரைநடை விவிைடை 10. மணிமேகலை வாழ்க்கையில் குறட் கருத்தமைந்த ஒரு பகுதியை வரைக. - இராசமாதேவி, சிறையில் மணிமேகலைக்குப் பலப்பல துயரங் களைக் கொடுத்தாள். மண்ணிமேகலை தானறிந்த மந்திரவன்மையால் தப்பித்து நலமுடன் இருந்தாள். இதனையறிந்த இராசமாதேவி பொருத்தருளுமாறு வேண்டினள். அப்பொழுது அவளுடைய மனத்துயரை மாற்ற மணிமேகலை நல்ல அறிவுரைகளைக் கூறித் தேற்றி நல்வழிப்படுத்தினுள். இந்நிகழ்ச்சி இன்ன செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்' என்ற குறட் கருத்தைக் கொண்டதாக இருக்கின்றது. 4. கடல் கடந்த தென் இந்திய நாகரிகம் 1 தென்னிந்திய நாகரிகம் பரவியிருந்த கீழை நாடுகள் எவை ? தொலை கிழக்கில் பர்மா, மலேயா, சுமத்திரா, ஜாவா, போர்னியோ, சையாம், பூணும், காம்பூஜா, சம்பா முதலான நாடுகளில் தென் இந்திய நாகரிகம் பரவியிருந்தது. 2. பர்மாவில் தென்னிந்திய நாகரிகம் பரவியிருந்ததற்குச் சான்றென்ன ? பர்மாவில் உள்ள ஒரு கூட்டத்தாரின் பெயரிலிருந்து தென் இந்தியத் தொடர்புபற்றி ஒரு சான்று கிடைக்கக் கூடுமெனத் தெரி கிறது. மாண்’ எனப்படும் ஒரு பர்மா கூட்டத்தார் தலேங்’ எனவும் அழைக்கப்பட்டு வந்தனர். இது தென்னிந்தியாவிலுள்ள தெலிங்காணுவின் நினைவாய்த் தோன்றியிருக்கலாமென்பது ஒரு கருத்து. ஆகவே, ஒருவேளை தெலிங்கான நாட்டிலிருந்து சில மக்கள் பர்மாவிற்குச் சென்றிருக்கலாமென ஒரு சாரார் கருதுகின் றனர். கீழைப்பர்மாவில் தாட்டன் என்ற ஒர் ஊரை அமைத் தவர் தெலிங்கர் என்பவரென ஒருசெவி வழிச் செய்தியும் வழங்கு கின்றது. 3. தென்னிந்திய நாகரிகம் பர்மாவில் பரவியிருந்த மையைக் கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு நிறுவுக. கி.பி. ஐந்தாவது அல்லது ஆருவது நூற்ருண்டைச் சார்ந்த இரு தங்க ஏடுகளை மாண் கூண் என்ற சிற்றுாரில் கண்டு பிடித்திருக் கின்றனர். அவ்விரண்டு தாம்பாளங்களிலும் தென்னிந்திய எழுத் தில் சில சொற்கள் பொரிக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ருெரு சிற்றுாரிலுள்ள பெளத்த நினைவுக்குறிக் கல்வெட்டு ஒன்றில் பழைய தெலுங்குக் கன்னட எழுத்தில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டின் ஒரு வரி தென்படுகிறது. இதில் காணப்படும் எழுத்து வடிவம்
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/334
தோற்றம்