பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென் இந்திய நாகரிகம் ...] I தென்னிந்திய மன்னர்களாகிய பல்லவர் கதம்பர் முதலியே து கல்வெட்டுக்களில் உள்ளதை ஒத்திருப்பது உற்று நோக்குதற் குரியது. இக்கல்வெட்டில் குறிப்பிட்டிருக்கும் புரீ பிரபுவர் மார் என்பவர் பெரும்பாலும் அந்நாட்டை ஆண்டு வந்த மன்' என்ற அரசராக இருந்திருக்கலாம். வர்மன்’ என்ற சிறப்புப் பெயர் இந்தியப் பெயரென்பது திண்ணம். அது மன்னர்க்குரிய பட்டப் பெயர். மேலும், பிணப்பாதுகாப்பிற்குப் பயன்படுத்திய தாழிகள் மீது செதுக்கப்பட்டுள்ள வரிகளில் ஆர்யவிக்கிரமா, ஹரிவிக்கிரமா, சிம்ஹவிக்கிரமா என்ற சமஸ்கிருதமும் பாலியும் கலந்த பெயர்கள் காண்கின்ருேம். பர்மா நாட்டில் விக்கிரமா அல்லது வர்மா என்று எந்த மன்னன் பெயரின் பின்னும் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. மாண் மொழியில் இந்தியச் சொற் கள் பலவற்றைக் கடன் வாங்கிச் சேர்த்துக் கொண்டதை எளிதில் உணரலாம். இதல்ை தென்னிந்திய நாகரிகம் பர்மாவில் பரவி யிருந்தமையை அறியலாம் 4. பர்மாவில் தென்னிந்திய நாகரிகம் பரவியிருந்தமை யைக் கோவிற் சான்றுகொண்டு கூறுக. * - பர்மாவிலுள்ள திருக்கோயில்களைத் தக்காணத்திலுள்ள சிற்பிகளே கட்டியிருக்க வேண்டுமெனச் சிற்பநூல் வல்லார் ஸ்காட் என்பவர் கருதுகின்ருர். கோயில்களின் அமைப்புமட்டுமே பன்றி அவற்றிலுள்ள சிலைகளும், அவற்றின்தோற்றமும் பாவனை களும் தனிப்பட்ட தென்னிந்திய முறையை ஒட்டியனவென்று அவர் தெளிவாகக் கூறுகின்ருர், பாகன் என்ற ஊரில் தமிழ் எழுத்தில் பொறித்துள்ள கல்வெட்டொன்று கண்டு பிடிக்கப் பட்டது. அதிலிருந்து நாளுதேசி வணிகர் கட்டிவைத்த திருமால் கோவில் ஒன்று இருந்தது என்றும், அவ்வூரில் தமிழர் சிலர் குடி யேறி யிருந்தனர் என்றும் தெரிகிறது. அதே கோவிலுக்கு 13-ஆம் நூற்ருண்டில் கேரளத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் நன்கொடை அளித்துள்ள செயல் தென்னிந்திய மக்களுக்கு அவ்விடத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்ததென்ற கருத்தை வலியுறுத்துகிறது. இதல்ை தென் இந்தியாவிற்கும் பர்மாவிற்கும் கி.பி. ஐந்தாம் நூற்ருண்டின் துவக்கத்திலேனும் அதற்கு முன்னரேனும் பல வகைத் தொடர்புகள் இருந்து வந்தன என்பதை நன்குணரலாம். 5. தென்னிந்தியர் மலேயா நாட்டிலும் நெடுங்காலத் திற்கு முன்பே குடியேறி யிருந்தனர் என்பதற்கு எவ்வெக் கல்வெட்டுகளைக் காட்டலாம் ? தென் இந்தியர் மலேயா நாட்டிலும் நெடுங்காலத்திற்கு முன்பே குடியேறியிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் குவால லெலின் ஸிங் என்னும் கிராமத்தில் கி.பி. ஆருவது நூற்ருண்டையக் கல்வெட்டு, கெடாரமெனு மிடத்திலுள்ள கி. பி. நான்காம் நூற்ருண்டைச் சேர்ந்த இரு கல்வெட்டுகள்