உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சியின் கடமை o 2. இலக்கிய ஆய்வாளன் இலக்கியங்களை எவ்வாறு காண்கின்ருன்? இலக்கிய ஆய்வாளன் இலக்கியங்களின் மூலமாகப் பழங் காலத்தை ஆய்ந்து கண்டு கலைஞனையும் கவிதைகளையும் புதிய முறையில் ஆராய்கின்றன். இலக்கியங்களின் மேல் வரிசையிலும் ஆழத்திலும் புதைந்து கிடக்கும் உண்மை இயல்புகளையும், பாத் திரங்கள், செய்திகள் இவற்றின் தொடர்புகளையும் ஆய்ந்து வெளிப்படுத்துகின்ருன். தனது ஆய்வு வன்மையால் தொலைக் காட்சிகளையும் அணிமைக் காட்சியாக்கிக் காட்டுவான். 3. இலக்கிய ஆய்வாளரிடம் காணப்படும் குறைகள் யாவை? இவர்களிற் பெரும்பான்மையினர், தமக்கு முன் வந்த புகழ் மிக்க ஆராய்ச்சியாளர் சிலர் வெளியிட்ட கருத்துக்களையே கிளிப் பிள்ளை போலத் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். சில சமயங் களில் அவர்களுடைய உள்ளங்களில் வீழ்ச்சியும், மேலும் உயர முடியாத உயர்ச்சியும் மாறி மாறி உண்டாகின்றன. இதனுல் ஆர்ாய்ச்சி முடிவுகளிலும் குறைபாடுகள் ஏற்பட்டு, இலக்கியத்தின் உண்மைத் தன்மைகள் வெளிப்படாமல் நின்று விடுகின்றன. விரைந்து துண்பொருள்களைக் காணவேண்டும் என்ற ஆர்வத் தால் பெரிதும் உண்மைக்கு மாருக முடிவு கட்டி விடுகின்றனர். இவ்வாறு இலக்கிய ஆய்வாளரிடையே குறைபாடுகள் காணப்படு கின்றன. 4. இலக்கியங்களை ஆய்வோர் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் யாவை ? 1. இலக்கியங்களின் மூலமாக, கடந்த காலத்தைப் பார்த்துக் கலைஞனையும் கவிதைகளையும் புதுமுறைகளால் ஆராய்ந்து உண் மையை வெளிப்படுத்துதல். 2. பாத்திரங்களையும் செய்திகளையும் மேற்போக்காக ஆரா யாமல், அவற்றின் உண்மையான இயல்பு, நிலை, தொடர்புகள் முதலியனவற்றை நன்கு வெளிப்படுத்துதல். 3. ஆராய்ச்சிக் கண்ணுடியால் சேய்மைக் காட்சிகளையும் அணிமைக் காட்சியாக்கி, அவற்றை அண்மைப் பொருள்களுடன் ஒப்பிட்டு உண்மையை வெளிப்படுத்துதல். 4. பிற ஆய்வாளர் கூறியவற்றையே திரும்பத் திரும்பக் கூட்டியும் குறிைத்தும் கூருமல் அவற்றை ஒரு வழிகாட்டியாகக் கொண்டு, தம் நுண்மதியால் புதிய உண்மைகளை வெளிப் படுத்துதல். 5. காய்தல் உவத்தல் இன்றி கடுநிலையுடன் ஆய்ந்து, தாம் கண்டவற்றைத் துணிந்து வெளிப்படுத்துவது. இவை இலக்கியங்களை ஆய்வோர் மேற்கொள்ள வேண்டிய கடமைகளாகும்.