உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, '('. சிறப்பு உரைநடை வினவிடை 5. இலக்கிய ஆராய்ச்சியாளர்களின் சிறப்புக்கள் யாவை? இலக்கியங்களின் வாயிலாகப் பழங்கால நிகழ்ச்சிகனே அறிந்து கலைஞர்களையும் இலக்கியங்களையும் புதுமுறையில் ஆராய்ந்து உண் மைகளை வெளிப்படுத்துகிருர்கள். பொது மக்கட்கு எளிதாகத் தோன்றும் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து, அவற்றின் சிறப்புக்களை எடுத்துக் காட்டி, கலைஞனுடைய ஆற்றலைப் புலப்படுத்துகின்ருன். புதிய இலக்கிய நோக்கம் ஏற்பட வழியமைத்துக் கொடுக் கின்ருன். நடு நின்று ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்துவதனல் புது நோக்கும் பொது நோக்குங் கொண்ட கலைஞர்களைத் தோற்றுவித்து, இலக்கிய வளர்ச்சியைச் சிறப்புறச் செய்கிருன். இவை இலக்கிய ஆய்வாளரின் சிறப்புக்களாம். 7. அஞ்சாமை 1. நெடுங்கிள்ளி போர் செய்யும் முயற்சியின்றிக் ஆத வடைத்திருந்த ஆவூரை நலங்கிள்ளி முற்றுகையிட் டது பொருந்துமா ? போருக்கு அழைக்கும்பொழுது எதிரே வந்து பொருதாதவனை விடுத்துச் செல்வது முறைமையே. ஆனல் தனக்கும் உரிமையுள்ள ஊரைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னை நெருங்க விடாத ஒருவனே விட்டுவிடுவது நன்றன்று. விட்டுச் சென்ருல் தனக்கு உரிமை புடைய ஒன்றை அச்சம் காரணமாக விட்டுச் சென்ருன் என்ற பழியே வரும். ஆதலின் எனக்கு உரியதைக் கொடுக்கும் வரை யில் முற்றுகையிடுவேன்; வெளியில் வந்து போர் செய்வதானுல் முற்றுகை தவிர்வேன் என உறுதி பூணுதலே கடமை. ஆதலின் நலங்கிள்ளி முற்றுகையிட்டது பொருந்தும். 2. புலவர் எவரும் நலங்கிள்ளியை அணுகி அறிவுரை கூருமைக்குக் காரணம் என்ன? இதற்கு விடை மேலுரைத்ததை எழுதி, ஆதலின் புலவர் எவ ரும் நலங்கிள்ளியை அணுகி அறிவுரை கூறவில்லை என முடிக்க. 3. கோவூர் கிழார் நெடுங்கிள்ளியை அணுகி அறிவுரை கூறக் காரணம் என்ன ? எனக்கு உரியதைக் கொடு எனக் கேட்கும் பங்காணிக்குக் கொடுப்பேன்’ எனச் சொல்லிக் கதவு திறத்தலும் செய்யாமல், 'கொடேன், கேட்டால் போர் நிகழ்த்துவேன்’ என வெளி வந்து போரும் செய்யாமல் நலங்கிள்ளி நெடுநாள் ஆவூர்க் கதவடைத் திருந்தான். அதனல் யானைகள் குளங்களில் படியாமலும் கவனம்