பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சாமை 。7 பெருமலும் வருந்தித் தறியில் கட்டுண்டபடியே இடிபோல் முழங் கின. குழந்தைகள் பாலின்றி அலறின. மகளிர் மலரின்றிக் கூந் தல் முடித்தனர். வீடுதோறும் அழுகுரல் எழுந்தது. இதையறிந்த கோவூர் கிழார் மனம் வருந்தி அரசன் கடமை தவறியதாக உணர்ந்து அவனை அணுகி அறிவுரை கூறினர். 4. வெள்ளைக்குடி நாகனர் அரசனுக்குக் கூறும் அறி வுரை யாது ? அரசன் ஒருவன் கையிற் செங்கோல் தாங்கி, வெண்குடையின் கீழ், அரியாசனத்தில் இருப்பது, தன் வாழ்வும் புகழும் பெருக்கும் தன்னலத்திற்காக அன்று; அரசன் கொண்ட குடை வெயிலை மறைப்பதற்காகவும் அன்று; குடிகளின் துன்பத்தை மறைப்பதற் காகவே என்னும் பொருள் படக் கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை வெயில் மறைக் கொண்டன்ருே அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ ’’ என்று வெள்ளைக் குடி நாகனர் அறிவுரை கூறுகிரு.ர். 5. நெடுங்கிள்ளி கதவடைத்திருந்தது பொது நலத்தின் பாற்பட்டதா? தன்னலத்தின் பாற்பட்டதா? ஆவூர் அலறும் நிலையினை அறிந்தும் நெடுங்கிள்ளி கவலையின்றி இருந்தான். குழந்தைகளும் மகளிரும் வருந்தும் நிலையில் விட்டு விட்டு ஊரின் உரிமையைக் காக்கும் காவல் பொதுநலம் என்று எவ்வாறு சொல்ல இயலும்? பொதுநலம் நோக்கமாயின் ஊர் முழு தும் வருந்தும் துன்பத்தையே முதலில் போக்க வேண்டும். அத் னைச் செய்யாது கதவடைத்து உள்ளேயிருந்து கொண்டு வாளா விருத்தல் தன்னலத்தின் பாற்பட்டதேயாகும். .ே மறத்தின் பாற்பட்ட முறையும் அறத்தின் பாற்பட்ட முறையும் எது, எது என்பதை ஆசிரியர் எவ்வாறு விளக்குகிருர்? ஆண்மை மிக்கவர் ஆட்சிக்குரியர்; ஆண்மை மிகுந்தவர் யார் என அறிதற்கு மதிலின் புறத்தே இடங் குறித்துப் போர் செய்தே அறிதல் வேண்டும். வென்றவர் நாட்டை ஆளலாம்; ஊரார் அலறும் துன்பமும் தீரும் இது மறத்தின் பாற்பட்ட முறையாகும். நலங்கிள்ளிக்கும் ஆவூரை ஆளும் உரிமை உண்டு. அதனல் அடைத்த கதவைத் திறந்து நீயே ஆள்க’ எனக் கூறிவிடுவது இஃது அறத்தின் பாற்பட்ட முறையாகும் என ஆசிரியர் விளக்குகிரு.ர். 7. ஆவூரின் கொடுந்துயர் கண்டு நெடுங்கிள்ளியிடம் கோவூர் கிழார் அஞ்சாது எடுத்துரைப்பவை யாவை? கோவூர் கிழார் அஞ்சாது எடுத்துரைத்தவை : யானைகள் குளங்களில் படியாமலும் கவளம் பெருமலும் வருந்தித் தரையில் மு.-92