உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணக் குறிப்புக்கள் 3.13. அன்மொழித் தொகை : இரு சொற்கள் இணைந்து நின்று, அவ்விரு சொற்களிலும் அல்லாத ஒரு மொழி தொக்கு வருவது அன் மொழித் தொகையாம். அல்-மொழி-தொகை. உதாரணம் : பொற்ருெடி வந்தாள். இதில் பொற்ருெடி என்பது அன் மொழித் தொகை. இது, பொன்னலாகிய வளையல்களை அணிந்த பெண் என்று பொருள்படும். பெண் என்ற மொழி தொக்கு வந்தது. பொற்ருெடி என்பது பொன் லைாகிய வளை என்று வேற்றுமைப் பொருள்படப் புணர்ந் துள்ளமையால் இது வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும். இவ்வாறே ஏனைய தொகை யடியாகப் பிறந்த அன்மொழித் தொகையாக இருப் பின் அந்த அந்தத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும். ஆகுபெயர்: ஒன்றன் பெயர் அதனோடு சம்பந்தமுடைய வேருெரு பொருளுக்கு ஆகிவரும் பெயர் ஆகுபெயர் எனப்படும். உதாரண்ம் : இனிப்புத்தின்ருன். இனிப்பு ஒரு சுவையின் பெயர்; அஃது அந்தச் சுவையோடு தொடர்புடைய ஒரு பண் டத்துக்கு ஆகிவருகிறது. இது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் இவற்றின் அடிப்படையாகப் பிறக்கும். னிப்பு என்பது பண்பு (குணம்) அதல்ை இது பண்பாகு பெயர் எனப்படும். அன்மொழித்தொகை, ஆகுபெயர் வேறுபாடு மாணவர்கள் இல் விரண்டுக்குமுள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்வது நலம். ஆகு பெயர் ஒரு சொல்லில் வரும். அன்மொழித்தொகை இரு சொல்லில் வரும். ஆகு பெயர் அதனோடு (பிரிக்கமுடியாத) சம்பந்தமுடைய பொருளுக்கு ஆகிவரும். அன் மொழித்தொகை வேறு பிரித்துரைக்கக் கூடிய சொல் தொக்கு வரும். இனிப்புத் தின்ருன்-இதில் இனிப்பு என்ற ஒரு சொல் மட்டுமே ஆகுபெயர். பொற்ருெடி வந்தாள்-இதில் பொன் தொடி என்ற இரண்டு சொல்லும் சேர்ந்தே அன்மொழித்தொகை. ஆகுபெயரில் இனிப்புச்சுவை வேறு அச்சுவையையுடைய பண்டம் வேறு எனப்பிரிக்க முடியாது. அன்மொழித்தொகையில் பொன் வளைவேறு, அதனையுடைய பெண் வேறு என வேறு பிரித்து உணரலாம். வினையாலணையும் பெயர் : ஒரு வினைமுற்று வினைப் பொருளை யுணர்த்தாமல் ஒரு பெயர்ப்பொருளே உணர்த்தி நின்ருல் அது வினையாலணையும் பெயர் எனப்படும். - உதாரணம் : அழுக்கறுப்பான் சுற்றம். இதில் அறுப்பான் என்பது வினையாலணையும் பெயர். அறுப்பான் என்பது வினை +