பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 இலக்கணக்குறிப்புக்கள் முற்று. அது வினைமுற்றுப் பொருளையுணர்த்தாமல் அறுப் ப்வகிைய ஒருவன் என்று பெயர்ப் பொருளை உணர்த்தி நிற்கின்றது. முற்றெச்சம் : வினை முற்றுச் சொல்லானது முற்றுப் பொருளை உணர்த்தாமல் எச்சப்பொருள் பட்டு நிற்குமானல் அது முற்றெச்சம் எனப்படும். உதாரணம் ; நடுங்கினன் வீழ்ந்தான். இதில் நடுங்கினன் என்பது முற்ற்ெச்சம். இது நடுங்கின்ை என முற்றுப் பொருளை உணர்த்தாமல் நடுங்கி (வீழ்ந்தான்) எனப் பொருள்படுவதால் முற்றெச்சம் எனப்பட்டது. (முற்று-எச்சம்) ஈறுகெட்ட எதிர் மறைப் பெயரெச்சம் : - ஒரு பெயரெச்சம்_ஈற்றெ ழுத்துக் கெட்டு, எதிர்மறைப் பொருளை உணர்த்தி நிற்கு ம்ால்ை அஃது ஈறுகெட்ட எதிர்மறைப்_பெயரெச்சம் எனப் படும். உதாரணம் ; செல்லாக்காசு. இது செல்லாத காசு என்றிருக்க வேண்டும். இதில் ஈற்றிலுள்ள த என்ற எழுத் துக் கெட்டு, செல்லா என நிற்கிறது. அச் சொல் எதிர் மறைப் பொருளை உணர்த்தி நிற்கிறது. அதல்ை இஃது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படுகிறது. ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் : பெயரெச்சத்தைப் போலவே வினையெச்சமும் ஈற்றெழுத்துக் கெட்டு, எதிர் மறைப் பொருளை உணர்த்துமானல் ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் எனப்படும். உதாரணம் : முட்டாச் செயின். இது முட்டாது செய்யின் எனப்பொருள்படும் வினையெச்சத் தொடராகும். எதிர் மறைப்பொருளை உணர்த்தி ஈற்றிலுள்ள து என்ற எழுத்துக் கெட்டு நிற்கிறது. அதனால் இது ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் எனப்படும். செய்யுமென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் : செய்யும் என்ற வாய் பாட்டில் வருகின்ற பெயரெச்சம். உதார்ணம் : பர்டும் குயில். பாடும் என்பது செய்யும் என்பது ப்ோல வருகின்ற பெயரெச்சம். அதனால் இது செய்யுமென் ம் வாய்பாட்டுப் பெயரெச்சம் எனப்படும். (பாடும் குயில் பாடுகிற குயில்). செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று : பாடும்.குயில் என்பது குயில்பர்டும் என மாறி நிற்குமர்னல் பாடும் என்னுஞ்சொல் முற்றுப்பொருளைத் தந்துவிடுகிறது. இவ்வாறு முற்றுப் ப்ொருளைத் தருமானல் அது செய்யுமென்னும் வாய்பாட்டு விகனமுற்று எனப்படும். o