பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்ப ராமாயணம் 77 கருத்து சிவபெருமான் நாயனுர் நினைத்த திருவுருவத்தோடு காட்சி தந்து, அவரைத் தமது திருவடி நீழலிலே சேர்த்துக்கொண்டார். விளக்கம் * இமயப் பாவை: இமயமலையரசனுடைய மகள், அஃதாவது பார்வதி, பர்வத ராசன் புதல்வி என்று பொருள். இறக்கும் நிலையில் ஒருவர் என்ன எண்ணுகின்ருரோ அது பலிக்கும் என்று சொல்வார்கள். அதன்படி நாயனர் இறுதியில் எந்த உருவத்தை மனத்திற் சிந்தித்தாரோ அதே உருவில் இறை வன் காட்சியளித்தார். - இலக்கணம் பாவை-உவமையாகுபெயர். எட்டா-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நீழல்-கீட்டல் விகாரம், சந்தார்-ஈ-த்-த்-ஆர். ஈ-பகுதி, த்-சந்தி. இது நகரமா கத் திரிந்தது விகாரம், த்-இறந்த கால இடை நிலை, ஆர்-விகுதி. இ. கம்பராமாயணம் கம்பர்--ராமாயணம். கம்பரால் இயற்றப்பட்ட இராமா யணம், கம்பரது இராமாயணம் என விரியும். ராம-அயநம்-இரா மனப் பற்றி அறிவிக்கும் நூல். அயநம்-அறிவிப்பது எனப் பொருள் படும். இராமன் என்னும் சொல் யாவரையும் மகிழ்விப்பவன் என்ப் பொருள்படும். ராம-அயநம்-ராமாயணம். இது தீர்க்க சந்தி . இந்நூலுக்கு இராமகாதை என்றும், இராமாவதாரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. இது, வடமொழியிலுள்ள வான்மீகி ராமாயணத்தை மொழி பெயர்த்துச் செய்யப்பட்டது என்று கூறுவார்கள். இன்னுஞ் சிலர் இக்கதை தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வழங்கி வந்ததாகும். அதனையே ஒரு காவியமாகக் கம்பர் பாடினர் என்றும் சொல்லுவர். கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தாகாண்டம், சுந்தர காண்டம், உயுத்த காண்டம், என்னும் ஆறு காண்டங்கள் உள்ளன. உத் திர காண்டம் என்ற ஒன்றையும் சேர்த்து ஏழு காண்டம் என்று சிலர் கூறுவா. கம்பர் தமிழ் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். ஆகவே இவர்தம் து: லில் முன்னையோர் கருத்துக்களும், உவமைகளும் பரக்கக் காணலாம். அரசியல் துட் பங்கள், ! ழந்தமிழ்ப் பண்பு முதலிய உயரிய செய்திகளையும் ஆங்காங்கே அமைத்துப் பாடியுள்ளார். கற்பனை வளம் நிறைந் தது 鷺 அந்தந்த இடங்களுக் கேற்பச் சந்தங்கள் அமைந் திருக்கின்றன. இஃது இதிகாசவகையைச் சார்ந்தது.