பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 மார்ச்சு மாதம் என் துணைவி கலைச்செல்வியைச் சென்னைக்கு அழைத்து வந்தேன். நண்பர்கள் இல்லத்தில் தங்கியிருந்தோம். அப்பொழுது தங்கசாலைத் தெருவிலுள்ள, பள்ளி முன், மணியம்மையார் தலைமையில் மகளிர் மட்டும் இந்தியெதிர்ப்பு மறியல் நடத்தினர். என் துணைவி, அழகு வேலன் துணைவி, திருமாவளவன்துணைவி மூவரும் மறியற் போராட்டத்திற் கலந்து கொண்டனர். பணி விலகல் திருமணத்திற்குப் பின் ஒரே திங்கள்தான் சென்னையில் ஆசிரிய ராகவிருந்தேன். என் அன்னையார் வற்புறுத்தலால் விலக முடிவு செய்து விட்டேன். பலர் தடுத்தும் இசைந்திலேன். இங்கிருந்தால் உங்கள் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் ஏற்படும். ஊருக்குச் சென்றால் இந்த அளவு வளர்ச்சியிராது. பொருட்பற்றாக் குறையேற்படின் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றெல்லாம் தாத்தா எடுத்து ரைத்துங் கேட்கவில்லை. மார்ச்சு மாத இறுதியில் விலகல் மடல் பள்ளியிற் கொடுத்து விட்டுப் பயணமானேன். அழகு வேலண்ணனும் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்திருந் தார். பிரிவு வேதனையுடன் உரையாடிக் கொண்டிருந்தோம். வண்டிபுறப்பட அறிவிப்பு மணியடிக்கப்பட்டது. அண்ணன் சட்டைப்பையிலிருந்து ஒரு மடலை என்னிடம் கொடுத்தார். அது விலகல் மடல். என்ன அண்ணே இப்படிச் செய்து விட்டீர்கள்! என்றேன். நீ யில்லாத இடத்தில் எனக்கென்ன வேலை? எனக் கூறி ஒவென அழுது விட்டார். அத்துயரக் காட்சி, என் கண்ணிற்படக் கூடாதென்று வண்டி புறப்பட்டு விட்டது. விருத்தாசலம் வழியே செல்லும் விரைவு வண்டிக்குச் சீட்டு வாங்கியிருந்தோம். கும்பகோணத்திற்கும் தஞ்சைக்கும் இடையில் செல்லும்போது நன்றாக விடிந்து விட்டது. வண்டி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. இது என்ன கட்டை வண்டி மாதிரி மெதுவாகப் போகிறதே என்றேன். ஆம் இது கட்டை வண்டி தானே, கட்டையாற் செய்த வண்டிதானே என் நகைச்சுவைபட என் மனைவி கூறினார். தஞ்சாவூரில் வண்டி நின்றது. அடடா! இது என்ன தஞ்சா வூருக்கு வந்திருக்கிறோம் என்று பதறினேன். அருகிலிருந்தவர் என்