பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 83 பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் அவர் நண்பரும் கடற்கரையில் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது 'நீங்கள் என்ன சாதி?’ என வினவ, நான் சாதியில்லாதவன் என்றேன். 'நல்ல வளமான இடத்தில் பிறந்த அழகான ஒரு பெண்ணுக்கு மணமகன் வேண்டும். அவர்கள் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். உங்களை முதலியாரா?' என்று அவர்கள் கேட்டால் ஆம் என்று சொல்லுங்கள். சொல்லவிரும்பாவிடில்தலையை அசைத்துக் காட்டினால் மட்டும் போதும். பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ' என்றனர். பொய் சொல்லித் திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. துணிந்து சாதி பாராமல் வந்தால் செய்து கொள்ளு வேன் என்று கூறி விட்டேன். அதுவும் நின்று போயிற்று. வாணியண்ணன் (கவிஞர் வாணிதாசன்) சென்னைக்கு வரும் போதெல்லாம் என் திருமணம் பற்றியே பேசுவார். குடும்பம் நொடித்து விட்டதால் திருமணத்துக்குப் பணமில்லை என்று சொன்னேன். பெண்ணுக்கு ஏற்பாடு செய். பணம் நான் தருகிறேன்? என்று கூறினார். தாத்தா மயிலை. சிவ. முத்துவிடம் முடியரசன் இன்னுங் குழந்தையாகவே இருக்கிறார்; பெண் பாருங்கள், நாம் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைப்போம் என்று வாணி கூறியிருக் கிறார். தாத்தாவும் டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும் ஏதோ ஏற்பாடு செய்து விட்டனர். வழக்கம் போல் ஒரு நாள் தாத்தா என்னைத் தருமாம்பாள் அம்மையார் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சென்று, நான் சொன்ன பிள்ளை இவர்தான். பெயர் முடியரசன் என்று அறிமுகப் படுத்தினார். இந்தப் பிள்ளையைத்தான் நான் அடிக்கடி பார்த்திருக் கிறேனே. நல்ல பிள்ளையாச்சே நம்ம மணிமேகலையை ஏற்பாடு செய்து விடுவோம். நம்ம நடராசனிடம் சொல்லி விடுகிறேன் என்று அம்மையார் சொன்னார்கள். மணிமேகலை யார்? நடராசன் யார்? என்பதெல்லாம் எனக்கு இன்றும் தெரியாது. அதற்குள் புதுக்கோட்டையில் பெண் பார்த்திருப்பதாக என் நண்பர் எழுதியிருந்தார். வாணியண்ணனுக்கு எழுதினேன். நூறு உருவா எனக்கு விடுத்து, உடனே சென்று முன்னேற்பாடுகளைச் செய், அதற்குள் அறுவடை முடிந்து விடும். பிறகு பணம் தருகிறேன் என்று எழுதியிருந்தார். 1949 பிப்பிரவரியில் திருமணம் நடந்தது.