பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 ஆபத்திருக்கிறது என்று மக்கள் எண்ணி விடுவர். திருக்குறள் பரவாமற் போய்விடும், இப்போது கல்வியமைச்சர் அவினாசி லிங்கனார் தொட்டு விட்டதால், நாங்கள் தொடுகிறோம் என்று நகைச்சுவைபடப் பேசினார். திருக்குறளை, அவினாசிலிங்கனார் பள்ளிகளுக்குள் நுழைய வழி வகுத்தார், பெரியார், மக்கள் மன்றத்திற் பரவ வழியமைத்தார். திருமண முயற்சி 1948 சனவரி 25ல் தைப் பூசத்தை முன்னிட்டுத் திருவொற்றி யூருக்கு, உறவினர் அழைப்பையேற்று அழகுவேலன் சென்றார். என்னையும் உடனழைத்துச் சென்றார். அங்கே அவர் உறவினரி டையே சுருசுருப்புடன் உலவிவரும் இளம் பெண்ணைச் சுட்டிக் காட்டி இப் பெண்ணைப் பார்த்தால் என்ன நினைவு தோன்றுகிறது? என்றார், அழகான பெண், துடிப்புள்ள பெண், அறிவுள்ள பெண்” என்று நான் சொன்னேன். 'இன்னும் ஏதேனும் தோன்றுகிறதா?’ என்றார். எனக்கொன்றும் தோன்றவில்லை என்றேன். வயது எவ்வளவு மதிக்கலாம் என்றதும் 17 அல்லது பதினெட்டிருக்கும் என்றேன். அவள் ஒரு விதவை' என்று அண்ணன் கூறியதும் துடிதுடித்து விட்டேன். அப்பொழுதே என் நெஞ்சத்துடிப்பை, வேதனையைப் பாடலாக வடித்து வைத்தேன். "புதருள் கனி என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. பின்னர் மறுமணத்தை வற்புறுத்திக் கண்மூடி வழக்கம்' என்ற தலைப்பிற் கதையொன்றெழுதி வெளியிட்டேன். பாடலையும் கதையையும் படித்த அண்ணன், இப்படியெல்லாம் எழுதும் நீ செயலிற் காட்டு வாயா?" என்று வினவினார். அப்படியானால் திருவொற்றியூரில் பார்த்த அப்பெண்ணைத் திருமணஞ் செய்து கொள்கிறாயா? என்றார். பெண், பெண்ணின் பெற்றோர், இசைய வேண்டாமா? என்றேன். அவள் அடுத்த வீட்டுப் பெண், நீ எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் உன்னைப் பார்த்திருக்கிறாள். உன்னை விரும்புகிறாள். பெற்றோரிடமும் கூறி விட்டாள். அவர்களுக்கும் உடன்பாடுதான் என்றவுடன் முழுமனத் துடன் நானும் இசைந்தேன். ஆனால் பெண் வீட்டார் என் சாதகம்’ கேட்டதால் அஃது அன்றோடு நின்று போயிற்று.