பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 81 அருகிலிருந்த நான் இந்தியை எதிர்க்க எந்தத் தமிழாசிரியன் வந்தான்? என்று நாளை தமிழாசிரியர்களைக் குறை கூறுவீர்களே’ என்றேன். நான் குறை சொன்னது அந்தக் காலத்துப் பண்டிதர் களை, இப்ப இருக்கிற பிள்ளைகள், நாம எட்டடி தாண்டினால் பத்தடி தாண்டுகிற பிள்ளைகள். நீங்கள் வெளியிலே வந்து தொண்டு செய்வதைவிட, உள்ளேயிருந்து தொண்டு செய்வது தான் நல்லது. நீங்கள் வந்து விட்டால் வேறொருத்தன் அந்த இடத்திலே உட்கார்ந்து கொள்ளுவான்." "நாங்கள் சமுதாயத்தைச் சுத்தப் படுத்திக் கொண்டேயிருப் போம். அவன் மாணவர் மனத்தை அழுக்காக்கியே அனுப்பிக் கொண்டிருப்பான். இப்படியே போனால் சமுதாயம் எப்போது சுத்தமாவது? அதனால் நாங்கள் வெளியிலிருந்து சுத்தப்படுத்து கிறோம். நீங்கள் உள்ளேயிருந்து சுத்தமாக்கி மாணவர்களை அனுப்பிக் கொண்டிருங்கள். அதுதான் சமுதாயத்துக்கு நல்லது. என்ற மணி மொழிகளை உதிர்த்தார். திருக்குறள் மாநாடு அந்நாளில் திருக்குறள் மாநாடு ஒன்று பெரியார் கூட்டுவித்தார். நீண்ட பந்தல்; நுழைவுக் கட்டணம் இரண்டு உரூவா கட்டணம் வைத்துங்கட்டுக் கடங்காத கூட்டம். நாவலர் சோமசுந்தரபாரதியார், திரு. வி. க., சாத்துரர் வழக்கறிஞர் கந்தசாமி முதலியார் மூவர் தலைமையிலும் மூன்று நாள் நடைபெற்றது. தலைவர்கள் வருகிறார் களெனத் தெரிந்ததும் பெரியார் மேடையிலிருந்து இறங்கி வாயிலுக்கு ஒடி அவர்களை வரவேற்று அழைத்து வந்த காட்சி, பெரியாரின் எளிமை, பணிவு, தொண்டுள்ளம் இவற்றை விளக்கிக் காட்டியது. 'திருக்குறள் மாநாடென்று பெயர்சூட்டி, நுழைவுக் கட்டணமாக இரண்டு உரூவா வைத்தும், இவ்வளவு பெருங் கூட்டம் திரண்டு வந்துள்ளதென்றால், இஃது என் கெழுதகை நண்பர் ஈ.வே.ரா. ஒருவரால் மட்டும் இயலுமே தவிரப் பிறரால் இயலாது எனத் திரு.வி.க. புகழ் மாலை சூட்டினர். அண்ணா பேசும் பொழுது திருக்குறளின் அருமை பெருமைகளை யெடுத்துக் கூறிவிட்டு, 'தமிழனுக்கு உகந்த இத்திருக்குறள் நூலை இவ்வளவு காலம் ஏன் நாங்கள் பரப்பவில்லையென்று நீங்கள் எண்ணலாம். நாங்கள் தொட்டிருந்தால், சுயமரியாதைக்காரன் தொடுகிறான்; இதில் ஏதோ