பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 O கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 ஒரு நாள் மட்டுந்தான் என்ற விடை கேட்டு, அவரும் பேசாதிருந்து விட்டார். மொழியாசிரியர் மாநாடு மொழியாசிரியர் மாநாடொன்று தாத்தாவால் கூட்டப் பட்டது. தந்தை பெரியார்தலைவர். அவர்காலடியில் நான்அமர்ந்திருக்கிறேன். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உரையாற்றும் பொழுது, தமிழ் மக்களுக்குத் தமிழன்தான் தலைவனாக இருக்க வேண்டும். ஒரு தெலுங்கனோ, மலையாளியோ, கன்னடியனோ தலைவனாக இருத்தல் கூடாது' என்று உரையாற்றிக் கொண்டிருந்தார். பெரியார் உடனே மேசை மேல் இருந்த தாளையெடுத்துத் தமிழ் ஒழிக’ என்று பெரிய எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டார். முத்தமிழ்க் காவலர் பேச்சின் நோக்கமும் பெரியார் எழுதி வைத்த நோக்கமும் எனக்கு விளங்கவில்லை. இடையில் அழகு வேலன், திருமாவளவன், நான் மூவரும் இந்தியெதிர்ப்புப் போரில் நாங்கள் ஈடுபடவும் அதனால் ஏற்படும் எவ்வகை ஈகத்தையும் (தியாகத்தை) ஏற்கவும் அணியமாக (தயாராக) உள்ளோம் என எழுதிக் கையொப்பமிட்டு ஒப்புதலுக்காக ஐயாவிடம் கொடுத்தோம். முத்தமிழ்க் காவலர்உரையாற்றிய பின் ஐயா பேசத் தொடங்கினார். முதலில் தமிழ் ஒழிய வேண்டும், மலையாளம், கன்னடம், தெலுங்கு எல்லாமே ஒழிந்து, ஆங்கிலந்தான் ஆள வேண்டும். அப்போதுதான் இந்தத் தமிழன் உருப்படுவான்!” தமிழன் தலைவனாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எந்தத் தமிழனுக்கு யோக்யதை இருக்கிறது? இருந்தால் வரட்டுமே. நான் ஏன் இந்தப் பாடுபட வேண்டும்?' என்று பேசிவந்தவர், தணிந்து, தமிழ் ஒழிய வேண்டும் என்று வேகத்தில் பேசி விட்டேன். தமிழ் இல்லை யென்றால் இந்தத் தமிழன் உருப்பட முடியாது. தமிழைக் காப்பாற்ற இந்தியை நாம் ஒன்று கூடி ஒழித்தே ஆக வேண்டும். 'இப்போது கூட இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் எந்தத் தியாகமும் செய்யக் காத்திருப்பதாகவும் இங்கே மூணு பிள்ளைகள் எழுதிக் கொடுத்தார்கள். என்னைக் கேட்டால் வேண்டா மென்றுதான் சொல்லுவேன்' என்று பேசிக் கொண்டிருந்தார்.