பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 79 'நான் தமிழாசிரியர் கழகத்துக்குத் தலைவர்; கூட்டத் தலைவர் பேசியதை நான் பேசியதாகக் கருதி விட்டீர்கள் என்று கருதுகின்றேன். அவரும் அப்படியொன்றும் திட்டவில்லை; சிறிது உணர்ச்சி வயப்பட்டு வேகமாகப் பேசினார். அவ்வளவுதான் என்று தாத்தா மறுமொழி தந்தார். 'சரி, அது போகட்டும், தமிழுக்கோ தமிழாசிரியர்க்கோ நான் தீமை செய்து விடுவேன் என்றா கருதுகிறீர்கள்? நானும் தமிழன் தானே! கனவிலும் தீமை செய்ய நினைக்கமாட்டேன் என் சொல்லை உறுதியாக நம்பி நீங்கள் போய் வரலாம் என்று விடை யளித்த அவர் இன்னொன்றும் உங்களுக்குச்சொல்கிறேன்; சிவ.முத்து என்ற நல்ல பெயருடைய நீங்கள், உங்கள் கழகத்தில் சுயமரியாதைக் காரன் எவனாவது இருந்தால் சொல்லுங்கள்; நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். தாத்தாவா காட்டிக் கொடுப்பார்? அப்படி யெல்லாம் யாருமே எங்கள் கழகத்தில் இல்லையே' என்று கூறி மீண்டார். உடனே பட்டதாரி ஆசிரியர்க்கு நிகராகத் தமிழாசிரியர்க்கும் சம்பளம் கொடுக்க ஆணை பிறப்பித்துத் தம் வாக்குறுதி"யை நிறைவேற்றினார். விளங்கிக் கொள்ளும் ஆற்றலுடையோர் அமைச்சரானால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதை மெய்ப்பித்துக் காட்டி விட்டார்.' இந்தி எதிர்ப்பு மறியல் உடல் நலக்குறைவால் 1948 ஆகத்து எட்டாம் நாள் மேலைச்


***- . . .

சிவபுரிக்குப் புறப்பட முடிவு செய்திருந்தேன். மாலை புலவர் த. மா.திருநாவுக்கரசு வந்து, நாளை முதல் பள்ளிகளுக்கு முன் இந்தியெதிர்ப்பு மறியல் போராட்டந் தொடங்குகிறது. அண்ணா, முதல் சர்வாதிகாரி, இது பெரியார் ஏற்பாடு' என்றார். கேட்டதும் உடல் நன்றாகி விட்டது. உடனே கடைக்குச் சென்று கருப்புத் துணியெடுத்து, இரவோடிர வாகச்சட்டை தைத்துக்காலையில் அணிந்து பள்ளிக்குச்சென்றோம். தலைமையாசிரியர் முதல் அனைவரும் மருண்டு மருண்டு பார்த்தனர். தலைமையாசிரியர் என்ன இப்படி!' என்றார். நாங்கள் தமிழாசி ரியர்கள். தமிழுக்குத் தீங்கு வருகிறது. எங்கள் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளவே தவிர, வேறு எந்த நோக்கமு மில்லை. அதுவும்