பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அழைக்கவில்லை. எனினும் என்றுங் கருஞ் சட்டையணியாத அண்ணா, நாவலர் நெடுஞ்செழியனுடையை கருப்புச் சட்டையை வாங்கியணிந்து கொண்டு தாமே மேடைக்கு வந்துவிட்டார். பலரும் பேசினர். அண்ணாவின் பேச்சை எதிர்பார்த்துக் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதனையறிந்து கொண்ட ஐயா, தம் கைத்தடியால் மேடையில் தட்டி, பொறுத்திருங்கள். அண்ணாதுரை பேசுவார். இப்பொழுது மற்றவர்கள் பேசட்டும்' என்று கூறினார். ஒரே ஆரவாரம். பலரும் பேசிய பின் திரு.வி.க.அண்ணாவைப் பேச அழைக்கும் போது, தமிழ்ச் சிங்கம், தமிழ் அரியேறு' எனக் குறிப்பிட்டார். புகழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலாத அண்ணா, நாவைக் கடித்துக் கொண்டு நாணித் தலை குனிந்தார் பின்னர் அண்ணா பேசினார். அண்ணாவின் பேச்சில் கனல் சிந்தியது. தமிழாசிரியர் கழகம் தமிழாசிரியர் நிலைமையைக் குறிக்கும் வகையில், சென்னையில் பேட்டை தோறும் துக்க வாரம்' என்ற பெயரில் தாத்தா மயிலை. சிவமுத்து கூட்டங்கள் நடத்தினார். நானும் நாவலர் நெடுஞ் செழியனும் முத்தியாலுப்பேட்டையிற் பேசினோம். மற்றொரு பேட்டையில் நடந்த கூட்டத்தில் தலைமை தாங்கிய எஸ்.எஸ். அருணகிரிநாத முதலியார், கல்வியமைச்சரைக் கடுமையாகத் தாக்கிப் பேசிவிட்டார். இது கல்வியமைச்சருக்கு எட்டி விட்டது. தாத்தா, கல்வியமைச்சரிடம் வேண்டுகோள் அறிக்கை தரும் பொருட்டுச் செவ்வி (பேட்டி)க்காகக் காத்திருந்தார். தமிழாசிரியர் கழகத்தலைவர் என்றவுடன், ‘என்னைக் கண்டபடி திட்டியவனைப் பார்க்க முடியாது என்று அமைச்சர் மறுத்து விட்டார். கூட்டத் தலைவர் அருணகிரிநாதர் பேசியதைத் தமிழாசிரியர் கழகத் தலைவர் என்று தவறாகப் புரிந்து கொண்டு அவ்வாறு சொல்லி விட்டார். - தாத்தாசலிப்படையவில்லை. சின்னாட் சென்றபின் மறுமுறையும் சென்றார். மயிலை. சிவ. முத்து என்ற பெயரைப் பார்த்ததும் அமைச்சர் உள்ளே அழைத்தார். இவ்வளவு நல்ல பெயருடைய நீங்கள் அன்று என்னைத்தாறுமாறாக ஏன் திட்டினர்கள்? என வினவ,