பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் [77 மொழிந்தார்.அஃதுஇன்னும்என்செவிகளில் வெண்கலமணியொலியென ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அம்மணி யொலியாவது: 'தமிழ்மொழி கருப்புச் சட்டைக்கு மட்டும் சொந்தமன்று: காவிச்சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; கதர்ச்சட்டைக்கு மட்டும் சொந்தமன்று; தமிழ் நாட்டில் உடற்சட்டை யெடுத்த ஒவ்வொரு வருக்கும் சொந்தம். அதனால் தமிழைக் காக்க வேண்டியது தமிழர் அனைவர்க்கும் கடமையாகும்’ என்பதாகும். ஒவ்வொரு தமிழனும் இப்படிக் கருதிவிடின் தமிழ் நாட்டில் எங்களுக்குத் தமிழிற் பாடஞ் சொல்லிக் கொடு எனக் கெஞ்ச வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்குமா? ஆங்கிலம் நம்மை அடிமையாக்கியிருக்குமா? இந்திதான் கோலோச்ச முந்துமா? உணர்வற்ற மாந்தராக - நாமமது தமிழரெனக் கொண்டு வாழ்வோமா? என் சொல்லி இரங்குவது? மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் நிறைந்திருந்தது. அப்பொழுது வலுத்தமழை கொட்டி விட்டது. அண்ணா உடனே எழுந்தார். தோழர்களே! வெளியூரிலிருந்து வந்த பலர் வெளியில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளேயிருக்கும் உள்ளுர்த் தோழர்கள் வெளியிற் சென்று நின்று கொண்டு, அவர்களை உள்ளே வர விடுங்கள். நீங்கள் நனைந்தால் வீட்டிற்குச் சென்று உடை மாற்றிக் கொள்ளலாம். அவர்கள் நனைந்தால் எங்கே போவார்கள்:” என்று கூறிமுடிக்குமுன் உள்ளிருந்தோர்வெளியேறினர்; வெளியில் நின்றோர் உட்புகுந்தனர். படைத் தலைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் படை மறவரை நினைவூட்டினர் அத்தொண்டர்கள். அன்று தொண்டர்கள் நிலை அது! கருஞ்சட்டைப் படைக்குத்தடை 1948 ஆகத்து 15 துக்கநாள் எனப் பெரியார் அறிவித்தார். அதை இன்பநாளாகக் கருதி நாமுங்கலந்து மகிழ்வது நல்லது என அண்ணா எழுதி விட்டார். இதனால் இருவர்க்கும் கருத்து வேறுபாடு தோன்றி இருவரும். தனித்தனியே ஒதுங்கி நின்றனர். அப்பொழுது கருஞ்சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. பெரியார்கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். திரு.வி.க.வும் கலந்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அண்ணாவை