பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 கோவையில் முத்தமிழ் மாநாடு கூட்டப்பட்டது. பாட்டுப் போட்டியும் வைத்திருந்தனர். அழகின் சிரிப்பு’ எனும் தலைப்பிற் பாடல் வேண்டுமெனக்குறித்திருந்தனர். பாடல் வந்து சேர வேண்டிய இறுதி நாளும் குறிக்கப்பட்டிருந்தது. சண்முக சுந்தரம், போட்டிக்குப் பாடல் எழுதுமாறு வற்புறுத்தினார். சரி, சரி யென்று நாளைக் கடத்தினேன். பாடல் எழுதாமலேயே ஒரு நாள் மாலை பெரிய குளத்துக்குப் புறப்பட்டேன். பாடல் எழுதவில்லையே என நண்பர் வருத்தப் பட்டுக் கொண்டார். சரி, தாளும் எழுது கோலுங்கொடு; தொடர் வண்டியில் எழுதி, நாளை அஞ்சலிற் சேர்த்து விடுகிறேன் என்று சொன்னேன். ஆமா, இத்தனை நாள் எழுதவில்லை; தொடர் வண்டியில்தான் எழுதப் போகிறாயோ?” என்று சலிப்புடன் கூறித் தாளும் எழுது கோலுங் கொடுத்தார். மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் வரும் வரை, தொடர் வண்டியில் எழுதாமலே வந்து விட்டேன். இரவு, திண்டுக் கல்லிலிருந்து பெரியகுளம் செல்லும் கடைசிப் பேருந்து சென்று விட்டது. காலை நான்கு மணிக்குத்தான் வண்டியென்று கூறினர். இரவு முழுவதும் விழிப்பு, எவ்வளவு நேரந்தான் விழித்துக் கொண்டிருப்பது? பாடல் எழுதலாமே என்று அங்கிருந்த விளக்குக் கம்பத்தின் கீழ் அமர்ந்து எழுதினேன். அப்பொழுது பேருந்து நிலையம் வெறும் பொட்டலாகத்தான் இருக்கும். எழுதி முடித்து அங்குமிங்கும் உலவிக்கொண்டிருந்தேன். மணி நான்காயிற்று. பேருந்தேறிப் பெரியகுளம் அடைந்தேன். காலைக்கடன்களை முடித்து, பாடலுக்குப் படியெடுத்துக் கொண்டு மணி பதினொன்றுக்கு மேல் அஞ்சல் நிலையம் சென்றேன். கட்டு எடுத்து விட்டசெய்தியறிந்து வருத்தத்துடன் மீண்டேன். மறுநாள், போட்டியின் கடைசி நாள். வழியில் மீ. சு. இளமுருகனாரைக் கண்டேன். செய்தியைக் கூறினேன். பாடலைப் படித்துப் பார்த்தார். 'இது பரிசில் பெறத் தகுந்த பாடல் என்று கூறி, கூடு வாங்கி வந்து ஒட்டி, வெற்றிலைக் குன்று (வத்தலக்குண்டு) அஞ்சலிற் சேர்த்து விடுமாறு, பேருந்து நடத்துநர் ஒருவரிடம் கொடுத்து விட்டார். 1950இல் மாநாடு நடைபெற்றது. முதற்பரிசில் என்பாடலுக்கும் இரண்டாம் பரிசில் வாணியண்ணனுக்கும்(வாணி தாசன்) கிடைத்