பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 87 திருப்பதாகத் திராவிட நாட்டிற் படித்தேன். ஆனால் பரிசில் வந்து சேரவில்லை. பிறகு சிவகங்கையில் நடந்த தி.மு.க. மாநாட்டில் நாவலர் நெடுஞ்செழியன், ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசிலாக அளித்தார். சிலநாளில் அதையும் திருடன் கவர்ந்து சென்று விட்டான். கண்ணிர்த்துளி 1949இல் திராவிடர் கழகத்திலிருந்து கண்ணிர்த்துளிகள்' பிரிந்து செல்லும் நேரம், நானும் ஒரு கண்ணிர்த்துளி. பொன்னி யிதழில் கண்ணிர்த்துளி'யில் நான் எழுதியதும் வெளிவந்தது. அப்பொழுது புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்திலிருந்து பிரியாதிருந்த தோழர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது. முதலிற் பிரிந்து வந்து மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்து கொண்ட தோழர் இராம. கலியாணசுந்தரம் வீட்டில் அக்கூட்டம் நடைபெற்றது.அந்நிகழ்ச்சிக்கு என்னைத்தலைவராகப் போட்டார்கள். நான் தலைமை யேற்றுப் பேசும்பொழுது பிரிந்து வந்த என் தலைமையில், பிரிந்து வராத தோழர்களுக்குப் பாராட்டு நடைபெறு கிறது. காரணம் அமைப்பு முறையில் நான் பிரிந்தாலும் உள்ளத்தால் ஐயாவைப் பிரியவில்லை. ஐயாவை மறந்தவன், தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விடுவோன் ஆகிவிடுவான். தலைவர்கள் இன்று பிரிந்திருக்கிறார்கள். நாளை ஒன்று கூடினும் கூடலாம். தொண்டர்களாகிய நம்முட் பிரிவுணர்ச்சி தலைகாட்டுதல் கூடாது. நமக்கு ஐயாவும் வேண்டும். அண்ணாவும் வேண்டும். அண்ணா அணியைச் சேர்ந்தோர் ஐயாவையோ, ஐயா அணியைச் சேர்ந்தோர்.அண்ணாவையோபழித்துப் பேசுதல் கூடாது. பேசினால் திராவிட இனத்துக்குத் தீங்கு செய்தவராவோம் எனப் பேசினேன். அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தாரே தவிரக் கடைசி வரையில் ஐயாவைப் பிரியவே இல்லை. ஐயா கூட அண்ணாவை இழி சொற்களால் திட்டியதுண்டு. அண்ணா மறு மொழியே சொன்னதில்லை. நம்மைப் பண்படுத்தவேஐயா அவ்வாறு பேசுகிறார் என்று கூறுவார். பிரிந்த பொழுது, ஐயா படத்தை வீடுகளிலிருந்து கழற்றியவர் பலருண்டு. தலைவர் படங்களை மாட்டாதிருந்த நான், பிரிந்த பின்புதான் ஐயா படத்தை என் வீட்டில் மாட்டி வைத்தேன். அப்பொழுதும் அண்ணா படம் மாட்டவில்லை. நேரு காலத்தில் தி.மு.கழகத்தைத் தடைசெய்யப் போவதாக ஒரு செய்தி வந்தது.