பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப்பயணம் 93 ஒரு முறை 1954 இல் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிர மணியனார்.அழைத்திருந்தார். நாங்களே செலவு செய்து கொண்டு சென்றோம். தமிழ் படும் பாடு' என்னுந்தலைப்பிற் பேசினேன். நல்லுணவாலும் உயர் பழங்களாலும் எங்களைப் பேணிய முறை எமக்கு வியப்பைத் தந்தது. வரும் பொழுது பத்து உருபா தந்தார். நாங்கள் மறுத்தும் விடவில்லை. முதல் முறையாகப் பணம் பெற்ற கூட்டம் அதுதான். அதன் பின்னரும் நாங்கள் கேட்டதில்லை; அவர்களேதந்தால்பெற்றுக்கொள்வோம். இன்றேல்வந்துவிடுவோம். ஒரு நாள் தலைமையாசிரியர் ஆராவமுது ஐயங்கார் என்னை யழைத்து, நீங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு அடிக்கடி, கூட்டங் களுக்குச் செல்வதாக ஊருக்குள் பேசிக் கொள்கின்றனர். அதனால் கூட்டங்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்றார். ஆணையாக அன்று; அன்பாகவே கூறினார். எனினும் விதி முறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இயல்புடைய எனக்கு, என் உரிமை பறிக்கப்படுவது போன்ற உணர்வேற்பட்டது. உடனே விடுதலை வேண்டும் என்ற தலைப்பிற் பாடலொன்று பாடி வைத்தேன். ஒரு நாள் மாவட்டக் கல்வி அலுவலர் எபநேசர் என்பார் பள்ளி ஆய்வுக்காக வந்தார். நான் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடத் தலைமையாசிரியர் அறைக்குட் புகுந்தேன். பள்ளியில் கா.சு. துரைராசு என்ற என்இயற்பெயரிலுள்ள கா.சு.து. என்ற எழுத்துகளை கே.எஸ்.டி. என்று ஆங்கிலத்தில்அழைப்பர். புகுந்தவுடன் கே.எஸ்.டி. இங்கே வாங்க என்றார் தலைமையாசிரியர். நீங்க தி.க. மெம்பரா? தி.மு.க. மெம்பரா?' என்றார். திடீரென்று இப்படிக் கேட்கிறாரே என்று திகைத்து நின்றேன். 'என்ன? பேசாமலிருக்கிறீர்கள்?’ என்றார். என்னைப் பற்றி... உங்களுக்குத் தெரியுமல்லவா? என இழுத்தேன். அது சரி; எனக்குத் தெரியும்; மெம்பரா? மெம்பரில்லையா?" என்றார். இல்லை யென்றேன். டி.இ.ஒ. வந்ததும் முடியரசன் என்ற டி.எம்.கே. ஆசிரியர் இங்கே இருக்கிறாராமே என்று கேட்டார். அதனால் தான் கேட்டேன். அவர் கேட்டால் நீங்கள் பதில் சொல்லத் தயாராக இருங்கள் என்று கூறினார். நான் பதில் சொல்லிக் கொள்கிறேன் - என்றேன். 'என்ன சொல்வீர்கள்?’ என்றார் தலைமையாசிரியர். அவர் எப்படிக்