பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 இராமச்சந்திரன் என்ற பெயரைநிலவழகனாக மாற்றிக் கொண்ட நீங்கள் - கலைஞரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையில் இருக்கும் நீங்கள் தமிழ் மரபையும் காக்க வேண்டாமா? சேரா, சோழா என்பதில் ஒரு புள்ளி மட்டும் வைத்தாற் போதும் சேரர், சோழர் எனத் தமிழாகிவிடும். அரசுக்கும் செலவு அதிகமாகாது - எனக்குறிப்பிட்டேன். அமைச்சர் பேசும்பொழுது, தமிழ் மரபு காக்கப்படவில்லையே எனக்கவிஞர் வருத்தப்பட்டுக் கொண்டார். அரசுக்குச் செல வில்லாமல் வழியும் சொல்லி விட்டார். சென்னைக்குச் சென்றதும் முதல் வேலையாக இதை நிறை வேற்றுகிறேன்' என்று உறுதி அளித்தார். அவ்வாறே சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஊர்தோறும் உலா வந்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் அன்று! கூட்டம்முடிந்தவுடன்அங்கு வந்திருந்த மாவட்டக்கல்வியலுவலர் இராசா என்னையழைத்து என்ன! அமைச்சரை இப்படிப் பேசி விட்டீர்கள்!' என்று வருத்தப்பட்டார். நான் இந்நாட்டு குடி மக்களுள் ஒருவன். அமைச்சரிடம் வேண்டிக் கொள்ளும் உரிமை யும் உண்டு. அவரே ஒப்புக் கொண்டு விட்டாரே - என்றேன். 'இருந்தாலும் அப்படிப் பேசியிருக்கக் கூடாது' என்று மீண்டும் சொன்னார். சரி, சரி இவரை விளங்க வைக்க முடியாது என்று பேசாதிருந்து விட்டேன். விடுதலை விடுதலை 1974 - 75இல் மாணவர்கள் நிலை மாறி விட்டது. எனக்கும் கண்ணிற் படலம் படர்ந்து பார்வை மங்கியது. அன்றைய தலைமை யாசிரியர் போக்கும் சரியில்லை. அதனால் பள்ளிப் பணியிலிருந்து விலகிக் கொள்ள முயன்றேன். இதனையறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஒ.) சாமுவேல் அடிக் என்பவர் உங்களைப் போன்றவர்கள் விலகுதல் கூடாது. சும்மா பணியில் இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தடுத்து விட்டார். 1966 ஆம் ஆண்டு என் பூங்கொடிக் காப்பியத்துக்குத் தடை விதித்து. எனனையும் பணியிலிருந்து நீக்கி விட அரசு முயன்று, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது. 67இல் அரசு மாறி விட்டமையால் அனைத்துக் கோப்புகளும் மூடி வைக்கப்பட்டன.