பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் enerere பயணம் 99. பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்டக் கல்வி யலுவலர் இராசா கூட்டுவித்தார். தலைவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன், கூட்டம் தொடங்குமுன் ஒரு தனியறையில் தேவகோட்டை இராம. வெள்ளையன், அமைச்சர், நான் மூவரும்உரையாடிக் கொண்டிருந் தோம். நேரமாகிறதே கூட்டத்தைத் தொடங்கலாமே என்றேன்.நான். "எல்லா ஆசிரியர்களும் வந்து விட்டார்கள் துரைராசுங்கிற ஆளைத்தான் இன்னுங் காணோம்' என்று வெள்ளையன் கூற, நான் தான் துரைராசு என்றேன். அட! என்ன அண்ணே! எனக்குத் தெரியாதே!?’ என்றார் வெள்ளையன். அமைச்சருக்கும் முடியர சனைத்தான் தெரியும் துரைராசைத்தெரியாது. அவரும் வியப்பில் ஆழ்ந்தார். பின்னர்க்கூட்டம் தொடங்கியது. அமைச்சர் பொன்னாடை போர்த்துச் சிறப்புச் செய்தார். - நல்லாசிரியர் சார்பில் நன்றி கூறுமாறு என்னைப் பணித்தனர். நல்லாசிரியர் யாரெனத் தேர்ந்தெடுத்து இவ்விருது கொடுக்கப் படுவதில்லை; அகவை முதிர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்துத்தான் கொடுக்கப்படுகிறது. அதனால் இதை நான் பெருமைக்குரியதாகக் கருதவில்லை. ஏனென்றால் என்னையும் அகவை முதிர்ந்தவனாகக் கருதிவிடுவார்களல்லவா? (நான் எப்பொழுதும் இளைஞன் என்று சொல்லிக் கொள்பவன்) என நகைச்சுவையாகப் ப்ேசினேன். கல்வியலுவலர் இராசா, கூட்டம் முடிந்ததும் உங்கள் கவிதைக்குக் கிடைக்கும் சிறப்பை விட் இவ்விருதுதான் சிறந்தது' என்று கூறி மகிழ்ந்தார். இவ்விருது எனக்குக் கிடைத்ததினால் அவருக்குத் தான் பெரு மகிழ்ச்சி. s . ." மற்றொரு சமயம், அழகப்பர் கல்லூரியில் என் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் பண்ருட்டியாரும் கலந்து கொண்டார். அப்பொழுது, சேரா, சோழா, பாண்டியா பல்லவா எனப் பேருந்துகளுக்குப் பெயர் வைக்கப் போவதாக்ச் செய்தித்தாளில் படித்தேன். நான் பேசும் பொழுது, தமிழிற் பெயர் சூட்டுவது கண்டு மகிழ்கிறேன். ஆனால் சேரா, சோழா என்பது தமிழ் மரபன்று. தமிழாக இருப்பதோடு தமிழ் மரபும் காக்கப்பட வேண்டும்.