பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[58] கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 மொழி வெறி மட்டும் இங்கே இருந்திருக்குமானால் அரியணை ஏறஅயல்மொழிகள் படையெடுத்துவரநினைக்குமா? துறை தோறும் துறைதோறும் தமிழ் மொழி வேற்றுமொழிகட்கு ஆட்பட்டுக் கிடக்கும் நிலை வருமா? அதிகம் கூறுவானேன்; தமிழிலும் வழிபாடு செய்ய உரிமை வேண்டும்’ என்று குன்றக்குடி அடிகளார் கெஞ்சிக் கேட்கும் நிலை வந்திருக்குமா? மொழிவெறி இல்லாத ஒரே காரணத்தாற்றானே தமிழுணர்வு முடமாகிக் கிடக்கிறது. இந்நிலையில் மொழி வெறி கூடாது என அறிவுரை கூறுவது முறையாகுமா? தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் வேண்டும் என்றால் இந்த நாட்டில் மொழி வெறி தோன்றித்தான் ஆக வேண்டும் என்று உணர்ச்சி வயப்பட்டுப் பேசி விட்டேன். குன்றக்குடி அடிகளார் விழிகள் சிவந்தன. முடிப்புரை கூற எழுந்தார். உணர்ச்சி வயப்பட்டுப் பேசினார். நண்பர் முடியரசன் கூறியதை நூற்றுக்குநூறு வரவேற்கிறேன். இந்த நாட்டில் தமிழுக்கு அத்தனை தடைகள் இருக்கின்றன. அத்தடைகளை உடைத்தெறிய மொழி வெறி வேண்டும் எனக் கூறி முடித்தார். ஒரு நாள், மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக இருந்த முனைவர் மா. இராசமாணிக்கனாரைக் காணச் சென்றேன். அவர் தமது கல்லூரிக்கு ஆசிரியராக வருமாறு அழைத்தார், பள்ளிப் பிள்ளைகளுடன் பழகும் இன்பத்தைக் கண்ட நான் அங்கு வர மறுத்தேன். இந்த விண்ணப்பத்திற் கையொப்ப மட்டும் போடுங்கள் என்று பலகால் வற்புறுத்தியும் இசையாது வந்து விட்டேன். - சென்னையிலும் காரைக்குடியிலும் பெருந்தன்மை மிக்க தலை மையாசிரியர்களிடமும் தகுதியுந்திறமையும் இல்லாத தலைமை யாசிரியரிடமும் பணியாற்றியிருக்கிறேன். காரைக்குடிப் பள்ளித் தாளாளர் பெருஞ்செல்வர். என்னிடம் நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார். நல்லாசிரியர் விருது கா. சு. துரைராசாகிய எனக்கும் பிற ஆசி ரியர் சில ர்க்கும் நல்லாசிரியர் விருது கிடைத்து. தேவகோட்டையில் நகரத்தார்