பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ጙ கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 நூல்கள் என்பதாலும், அவர் மீது எனக்குப் பற்றும் பாசமும் உண்டு. மேலும் எந்தையின் செம்மொழிச் செல்வங்கள் அனைத்தும் தமிழ்மண் பதிப்பகம்வழிதமிழுலகிற்குக்கிடைப்பதுஎனக்கு மகிழ்ச்சி என்பதாலும் அவரது வேண்டுகோளை ஏற்று, தந்தையின் படைப்புகள் முழுமையும் தொகுத்து இத் தன்வரலாற்றையும் தமிழ்மண்ணுக்குத் தந்தேன். உடனடியாக மேற்கூறிய மகனுரை' யை எழுத வேண்டிய கட்டாயத்தால் என் நினைவுக்கு வந்த செய்திகளை அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்து, ஏறத்தாழ 150 பக்கங்கள் கொண்ட உரையையும் திரு.இளவழகனார்க்கு விடுத்தேன். ஆனால் அவ்வுரை ஒரு நூல்போல் அமைந்துவிட்டதால், அதனை தந்தையின் தன் வரலாற்று நூலுடன் சேர்க்காமல் தனி வெளியீடாகத் தரலாம் என்று அவர் கூறினார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு, மகனுரை' எனுந்தலைப்பை மாற்றி, ‘அப்பா... வரலாற்று நினைவுகள்’ என்று தலைப்பிட்டேன். அதனைத் தனி வெளியீடாகத் தரும் அவருக்கென் நன்றி. எந்தை, தன்வரலாற்றில் தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, தன் வாழ்க்கையைப் பற்றி வெள்ளை உள்ளத்தினராக, குழந்தை மனத்தினராக ஒளிவு மறைவின்றி உள்ளத்தாற் பொய்யாதொழுகியுள்ளதை இந்நூலைத் துய்ப்போர் உய்த்துணரலாம். தனக்குப் பெருமை சேருமென்றோ சிறுமை சாருமென்றோ எச்செய்தியையும் பிறழ்ந்து கூறினாரல்லர். எடுத்துக்காட்டாக, என் திருமணம் பற்றிக் கூறுமிடத்துத் தன் மகனான என்னைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஆனால் அவருக்குப் புகழ் சேர்த்த பல நிகழ்வுகளை ஏனோ கூறாது விடுத்தார். அவர், ஈரோட்டுப் பெரியாரின் இனவெழுச்சிப் போராட்டப் பாசறைக்குள் போய்ச் சேர்ந்த நாள் முதலே, நீர்க்கோல வாழ்வினிலே நெடிதே துயருறினும் போர்க்கோலம் மாற வில்லை. வெந்துயரம் உற்றாலும் கேட்டுக்குக் கேடு பல கிளர்ந் தெழுந்து தாக்கிடினும் கோட்டுக்குக் கோடு தாவும் கவியாக வில்லை. ஒங்கும் விளம்பரங்கள் உற்ற துணை புரிந்து, தாங்கும் சாதி சனம் கண்டதில்லை இறுதி வரை ஏக்கம் அதனாலே எள்ளளவும் கொண்டதில்லை. மானந்தனை யிழந்து மாற்றாரின் தாள் பணிந்து கூனல் மனத்தராய்க் கொள்கையை விற்றதில்லை. வீட்டை நினைந்தறியார் நாட்டை மறந்தறியார். அல்லல் எது