பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 துணைவியின் குணநலன் திருமணமாகி, எங்கள் வீட்டிற்கு வரும்போது, என் துணை வியார், கண்ணாடிச் சட்டமிட்ட பெரிய முருகன் படமொன்று கொணர்ந்து, சுவரில் சார்த்தி வைத்திருந்தார். என்ன இது? என்றேன். முருகன் படம், இந்த முருகன்தான் உங்களை எனக்குக் கணவராகத் தந்தார் என்று உருக்கமாக மொழிந்தார். என்னை உனக்குக் கணவராக்கியவர்கலியாணசுந்தரமா? முருகனா? முருகன் என்றால் ஏன் கீழே வைத்திருக்கிறாய்? ஆணியடித்து மேலே மாட்டி வை என்றேன். -- 'ஏன், உங்களுக்குப் பிடிக்கவில்லையா? என்றார். உன் உரிமையில் தலையிட மாட்டேன். உனக்கு விருப்பமெனில் தாராளமாக வைத்துக் கொள். யாரேனும் பார்த்தால் 'முடியரசன் ஊருக்குச் சொல்கிறான்; வீட்டைத் திருத்த முடியவில்லை’ யென்று ஏளனமாகப் பேசுவார்கள். அவ்வளவுதான். உன் விருப்பப்படி செய் என்று சொல்லிச் சென்றேன். மறுநாள் முருகன் படத்தையே காணோம். இறைப்பற்றுடையராகினும் கோவில், குளம் என்று எங்கும் செல்வதில்லை. ஒருவர்க் கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் பிணக்கேது? பிளவேது? என் அன்னையார், தம் மருமகளைத் தன் பிள்ளை போலவே கருதி அன்பு செலுத்தி வந்தார். நாளாக நாளாக மாறியது. எங்களுக்கு வேண்டியவர் எவரேனும் வருங்கால், என்னம்மா! தம்பிக்கு இப்படிச் செய்து விட்டாய்? எவ்வளவோ வசதியான இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு சொல் சொல்லியிருந்தால் அங்கு முடித்திருக்கலாமே. இப்பொழுதுதான் என்ன வந்துவிட்டது. நீ மட்டும் சரியென்று சொல், கொடைக்கானல் பெண்ணைச் செய்து விடலாம். சீர் வரிசைகள் நல்லாச் செய்வார்கள் என்று சொல்லிச் சொல்லி, என் அன்னையின் மனத்தை மாற்றி விட்டார்கள். எனக்கு மீண்டுமொரு மண முடிக்க முயற்சி மேற்கொண்டனர். சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்து கொண்ட நான், மனைவியிருக்க, குழந்தையிருக்க இரண்டாம் மணம் முடித்தால், சுயமரியாதைக் கொள்கைக்குப் பழி வந்து சேரும்: மேலும் நம் செல்வ நிலையும் இடந்தராது என்று மறுத்து உறுதியுடன் இருந்து விட்டேன். இது முதல், அன்னையார் என்னைக் குலப்பகைவன்