பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் ■ 109 கொண்டு நின்றார். அன்று முதல், என் மனத்துள் மனைவியாக இடம் பெற்றிருந்த அவர் மனைவியின் உயர்ந்த நிலையைப் பெற்று விட்டார். அக்குறிப்பை, மதுரை - தியாகராசர் கல்லூரிப் பாட்டரங்கிற் பாடும்பொழுது, செந்தமிழிற் சுவைகூட்டும் மொழிகள் பேசும் தீங்குயிலே நானுனக்குத் தெய்வ மென்றால் சிந்தையினை ஆண்டு கொண்ட நீயே எற்குத் தெய்வமெனச் சொல்வதலால் வேறு காணேன் என்னும் பாடலால் வெளிப்படுத்தினேன். என் பிணிக்குப் பாகற்காய், கீரை முதலிய ஏற்ற உணவுகள் என்று, தனியே சமைத்து வைத்திருப்பார். பகலுணவு முடிந்த பிறகு, சில மணிக்குப் பின், ஐயையோ! பாகற்காய் வைக்க மறந்து விட்டேனே' என்று பதறுவார். இரவுப்போதில் உண்ணக் கூடாதென்பதால் அது வீணே எறியப்படும். o எனக்குப் பிடிக்காத குழம்பு வைக்கப்படும் நாளில், பருப்புத் துவையல், அரைக்கச் சொல்லுவேன். உண்ணும்போது முதலில் துவையலிட்டுப் பிசைந்து உண்பேன். அடுத்துச் சாறு (ரசம்) ஊற்றாமல், குழம்பூற்றி விடுவார். என்ன செல்வி! இந்தக் குழம்பு கூடாதென்பதற்குத்தானே துவையல் போட்டுக் கொண்டேன். நீ அதையே ஊற்றுகிறாயே! என்பேன். அதன் பிறகுதான் அவருக்கு நிலைமை புரியும். சில நாள், காலையில் இரண்டு இட்டலி தட்டில் வைத்திருப் பார்.நான் உண்டபின், எத்தனை இட்டலி வைத்தாய்? என்பேன். ஐந்து' என்பார். இல்லையே! வயிறு நிரம்பிய மாதிரித் தோன்ற வில்லையே! என்பேன். தட்டில் எண்ணி வைத்து ஐந்து கொண்டு வந்தேன் இதோ பாருங்கள் என்று பக்கத்திலுள்ள வெறுந் தட்டைக் காட்டுவார். சரியென்று நம்பியெழுந்து வந்து முகப்பில் ஏதேனும் எழுதிக் கொண்டிருப்பேன். = திடீரென்று ஓடிவந்து, ஐயையோ! எண்ணி வைத்த இட்டலி மூன்று அடுப்படியிலேயே மறந்து வைத்து விட்டேன்!” என்று விழிப்பார். பின் எழுத்துப்பணி நிற்கும்; மூன்று இட்டலி தட்டிலிருந்து வயிற்றுக்கு மாறும். இப்படி ஒரு நாளா? இரு நாளா?