பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 கவியரசர்முடியரசன் படைப்புகள்-10 யருந்தி விட்டுக் காசு கொடுக்காமல் வந்து விட்டேன். வெளியில் வந்தபிறகுதான் கையில் சீட்டு இருப்பதைக் கண்டு, திரும்ப ஒடிக் காசு கொடுத்து வந்தேன். கடைக்காரர் தெரிந்தவர் ஆனதால் முதலில் வெளியே வரும்போது பேசாது விட்டு விட்டார். இல்லை யென்றால்...? - புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு வருவதற்காகப் பேருந்தில் ஏறியமர்ந்தேன். நடத்துநர் எந்த ஊருக்கு? என்றார். நான் புதுக்கோட்டைக்கு என்றேன். மறுபடியும் எந்த ஊருக்கு?’ என்று வேறு குரலிற் கேட்டார். புதுக்கோட்டைக்கு என்று நானும் உரத்துச் சொன்னேன். 'நீங்க, இப்ப எங்கே இருக்கீங்க?' என்றவுடன்தான் என் நினைவு மீண்டது. காரைக்குடிக்கு என்று கேட்டுச் சீட்டு வாங்கினேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். என் பேதைமையை எண்ணி நான் சிரித்தேன்; அவர் எதையெண்ணிச்சிரித்தாரோதெரியவில்லை. என்மகள்குமுதத்திற்கு மணமகன் பார்க்கக் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு வருவதாகச் சொல்லியனுப்பிருந்தேன். மணமகன் வீட்டாரும் பலருக்கு அழைப்பு விடுத்து, அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். நான் காரைக்குடியில் என் வீட்டருகே உள்ள நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு நின்றேன். புதுக்கோட்டை வழியாகத் தஞ்சாவூருக்குச் செல்லும் உந்து வந்தது. நிறுத்தும்படிக் கையைக் காட்டினேன். ஒட்டுநர் நிறத்தாமற் சென்று விட்டார். வண்டியில் ஐந்தாறு பேர்தான் இருந்தனர். எனினும் நிறுத்தவில்லை. அடுத்த வண்டியில் சென்றிருக்கலாம். அந்த அளவிற்கு எனக்குப் பொறுமையில்லை. நாம் நிறுத்தச் சொல்லியும் நிறுத்தவில்லையே என்ற சினத்துடன் வீடு திரும்பி விட்டேன். மறுநாள் புதுக்கோட் டைக்குச் சென்றேன். பலரும் வந்து காத்திருந்தது, உணவு ஏற்பாடு செய்தது - அனைத்துங் கூறி, மணமகன் வீட்டார் வருத்தப்பட்டனர். இவ்வாறு என் இயல்பு, மற்றையோர் இயல்பினும் மாறு பட்டதாகி விளங்குவதும் உண்டு. பல வேளைகளில் இவ்வாறுதான் நடந்து கொள்கிறேன். இதைப் பிள்ளைமைத்தனம் என்பதா? கிறுக்குத் தனம் என்பதா? ஒன்றும் தெரியவில்லை. என் உலகமே வேறு!