பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 113 பெரும்புலவர்கள் வருகை ஒரு நாள் ஒருவர் என் இல்லத்துக்கு வந்தார். வரவேற்று அமரச் சொன்னேன். அமர்ந்து, தாமாகவே சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கொன்றும் விளங்கவில்லை. நான் யார் தெரியுமா?’ என்றார். தெரியவில்லையே! என்றேன். உங்களுக்குத் தெரியாது; யாருக்குமே தெரியாது; நான்தான் போன பிறவியில் பாரதியாராகப் பிறந்திருந் தேன்' என்றார். சரி, சரி, இவர் விரைவில் வெளியேறினால் நல்லது என்று மனத்துள் எண்ணிக் கொண்டேன். நல்ல வேளை விரைவில் தாமாகவே எழுந்து, சிரித்துக் கொண்டே போய் விட்டார். இரண்டொரு நாளில் மற்றொருவர் வந்தார். புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனாரை எனக்குத் தெரியும்; உங்களையும் அடிக்கடி அங்கே பார்த்திருக்கிறேன். போன பிறவியில் கம்பனாகப் பிறந்த நான் இந்தப் பிறவியில் இப்படியலைகிறேன்' என்றார். அப்படியா? மிக்க மகிழ்ச்சி; என்ன வேண்டும்? என்றேன் சாப்பிட வேண்டும் என்றார். உண்டபின்அவரும் விடைபெற்றுக் கொண்டார். மற்றொரு நாள் இன்னொருவர் வந்தார். உங்கள் பாடலைத் திருக்குறள் விழாவிற் கேட்டேன். மிகவும் நன்றாகப் பாடுகிறீர்கள். திருவள்ளுவர் வேறு யாருமில்லை. நான் தான் என்றார். அடடே! திருவள்ளுவரா? சரி, வந்தது என் கருதியோ? என்றேன். 'ஒன்று மில்லை, சும்மா பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்!” எனச்சொல்லிச் சென்றார். இவ்வாறு பாரதியார், கம்பர், வள்ளுவர் தொடர்ந்து வந்தமை யைக் கண்ட என் துணைவியார், ‘என்ன? ஒரு மாதிரியான ஆளெல்லாம் உங்களைத் தேடியே வருகிறார்களே என்று வினவ, அதுதான் எனக்கும் விளங்கவில்லை! என்றேன். ஒரு வேளை, உங்களையும் அவர்களைப் போலவே கருதியிருப்பார்களோ? என்று இரட்டுற மொழிதலாக மொழிந்தார். (பைத்தியம், கவிஞன்) எனக்கேற்ற - என் கருத்திற்கேற்ற - மனம் நிறைந்த துணைவி தான். எனினும் ஒரே ஒரு குறை. அவர் என் பாடல்களைப் படித்துச் சுவைத்ததே கிடையாது. நான் என்னென்ன நூல்கள் எழுதியிருக்கிறேன் என்பதே தெரியாது. இரவு12 மணிவரை அடுப்படிதான்குடியிருப்பு. என்றாலும் நான் கற்பனை உலகிற் புகுந்து விட்டால், எனக்கு