பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 அவர் மகன் பாண்டியன் எம்.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். அவர்களிடம் சொன்னேன். அவர்களும் இசைந்துள்ளனர். பெண் பார்க்க அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்றார். அவ்வாறே ஒரு நாள், மணமகன் வீட்டாருடன் கலியான சுந்தரம் வந்தார். பெண்ணைப் பார்த்தார்கள். பிடித்தமாகி விட்டது. புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் தலைமையில், ஒப்பந்தம் எழுதப்பட்டது. கலைஞர் தலைமையில் திருமணம் நடத்த விழைந்து, அவர் ஒப்புதல் பெறச் சென்னைக்குச் சென்றேன். அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த க. வீரையாவும் வந்திருந்தார். புதுக்கோட்டையில் கூட்டுறவு வங்கிப் பொன் விழாவிற்குத் தலைமையேற்கக் கலைஞரை வேண்டினார். என்ன ஐயா, செயல் வீரர் கூட்டத்திற்கு வரும் போது வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது நமது மரபு. இது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கூறி அவ்விழாவிற்கு இசைவு தர மறுத்து விட்டார். - என்னை நோக்கி, கவிஞர்! நீங்கள் வந்த செய்தி என்ன?’ என்று வினவினார். என் மகள் குமுதம் திருமணத்துக்குத் தலைமை தாங்க வேண்டும் என்றேன். கலைஞர் மறுமொழி தருமுன் வீரையா இடைமறித்து, ஆமாங்க, திருமணத்தையும் பொன்விழா மேடை யிலேயே வைத்துக் கொள்ளலாம்; ஒரே நேரமாகப் போய் விடும்' என்று கூறினார். கலைஞருக்குச் சினம் தலைக் கேறி விட்டது. ‘என்னய்யா விளையாடுகிறாயா? யார் வீட்டுத் திருமணத்தை யார் வீட்டு மேடையில் வைத்துக் கொள்வது? செயல் வீரர் கூட்டம் நடக்கும் நாளில் மற்ற நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறேன். மீறிeறிக் கேட்கிறாயோ? இவர் நம்ம முடியரசன் என்பதால் ஒத்துக் கொண்டேன். போ, எல்லாக் கூட்டத்தையும் ரத்து செய்’ என்று வெகுண்டு பேசி விட்டு, எழுந்து, அறைக்குள் போய் விட்டார். வெல வெலத்துப் போய்விட்டார் வீரையா. நம் வேண்டு கோளும் வீண்தான் என்று நான் கருதிக் கொண்டிருந்தேன். உள்ளே சென்ற கலைஞருக்கு அவர் துணைவியார் தயாளு அம்மையார், பருக எதோ கொணர்ந்து கொடுத்தார். ஒன்றும் வேண்டாம் போ' என உரத்துக் கூவினார். சினம் இன்னும் ஆறவில்லை.