பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 117 சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளிவந்து, கவிஞர் 8.6.75 காலை 9 மணிக்குத் திருமணம் நடைபெறும். அழைப்பிதழில் அச்சிட்டு விடுங்கள்' என்று கூறிவிட்டு, வீரையாவை நோக்கி முடியரசனார் வீட்டுத் திருமணம், செயல் வீரர் கூட்டம் இரண்டு. நிகழ்ச்சிதான் என்று கூறிப்புறப்பட்டு விட்டார். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச்சமயத்தில் கலைஞர் செல்லுமிடமெல்லாம் அ.தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டிக் கொண்டிருந்தனர். புதுக்கோட்டைக்கு வரும் போதும் கருப்புக் கொடி காட்ட அக்கழகத்தினர் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். அதையறிந்த வீரையா அது நடைபெறா மலிருக்க மாற்று ஏற்பாடு செய்து விட்டார். இந்நிலையில் அ.தி.மு.க. தலைவர் ம.கோ. இராமச்சந்திரனார் (எம்.ஜி.ஆர்.), கலைஞர், கவிஞர் முடியரசன் வீட்டுத் திருமணத்துக்கு வருவதால், அ.தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்ட வேண்டாம்' என்று அறிக்கை வெளியிட்டார். அதனால் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. நான் காரைக்குடியில் இருப்பதால் புதுக்கோட்டைக்கு வந்து எவ்வித ஏற்பாடும் செய்ய இயலாமையால், புதுக்கோட்டை அழகப்பா நிழற்பட நிலைய உரிமையாளர் சுப. அழகப்பன் என்ற நண்பரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன். கலைஞர் வருவதால் மேடையை மலர்வண்ணமாக்கி அழகு படுத்தி விட்டார். என் நண்பர்கள் தான் அனைத்து உதவிகளும் செய்து துணை நின்றனர். - 8.6.75இல் புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. தலைமை தாங்கிய கலைஞர், 'செயல் வீரர் கூட்டத்திற் கலந்து கொள்ளும் பொழுது, பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் கூடாது என்பது எங்கள் மரபு. முடியரசனார் நெஞ்சத்தி லிருக்கும் தமிழுக்காகவும் கொள்கை உறுதிக்காகவும், அம்மரபிலிருந்து நெகிழ்ந்து இந்நிகழ்ச்சியிற் கலந்து கொள்ளு கிறோம் என்று கூறினார். நான் நேரிற்கண்டு அழையாதிருந்துங் கூட நாவலர் நெடுஞ் செழியனும் வந்து வாழ்த்திப் பெருமைப்படுத்தினார். பேராசிரியர் அன்பழகன் வந்திருந்து வாழ்த்திச் சிறப்பித்தார். அமைச்சர்