பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - 119 பொருளுதவியாலேதான் திருமணம் நடந்தேறியது என்பதை ஈண்டுக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அன்னம் திருமணம் அடுத்து இரண்டாம் மகள் அன்னத்துக்குத் திருமணம் செய்ய வேண்டும். கலப்பு மணத்திற்கு ஆள் வேண்டுமே! எண்ணிப் பார்த்தேன்! விடுதலை அலுவலகத்திற் சுயமரியாதைத் திருமணச் சங்கத்தில் பத்துப்பன்னிரண்டு முகவரிகள் பெற்று அவர்களை அணுகினேன். திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிலர், “எங்கள் சாதியாக இருந்தால் நல்லது என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டனர். வெளிப்படையாகச் சொல்லக் கூசிய சிலர், பிறபிற காரணங்கூறி விடுவித்துக் கொண்டனர். திருச்சியிலிருந்த சிவலிங்கம் என்ற ஒருவர் மட்டும் (பொது வுடைமைக் கருத்துக் கொண்டவர்) இசைந்து வந்தார். அவர் தம் மகளுக்குக் கலப்பு மணம் செய்து காட்டியவர். வேலை பார்க்கும் பெண்ணாக வேண்டுமென்று பையன் விரும்புகிறான். இன்றைய பொருளாதார நிலைக்கு அதுதானே உகந்தது?" என்று கூறி அவரும் ஒதுங்கிக்கொண்டார். - மற்றொருவர், திராவிடர் கழகத்தலைவர் ஒத்து வந்து பெண் பார்த்து விட்டுச் சென்றார். ஐயா கொள்கைப்படி சிக்கனமாகத் திருமணம் முடிக்கலாமென்று நான் கருதுகிறேன். உங்கள் விருப்ப மென்ன? என்று எழுதினேன். "எங்களுக்கு ஒரே பையன், அதனால் சீரும் சிறப்புமாக நடத்த விரும்புகிறோம்’ என்று விடையெழுதி ஒதுங்கிக் கொண்டார். அதாவது மணக்கொடை எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த அளவில் அப்பேச்சும் நின்று விட்டது. அண்ணன் இராம. சுப்பையா (முன்னாள்மேலவை உறுப்பினர்) அவர்களும் நானும்திருவொற்றியூரில் பணிபுரியும் அ.சற்குணம் டி.இ.இ., (பி.ஈ.,) என்பவரைக் கண்டு பேசி அவரையே மணமகனாக உறுதி செய்தோம். திருமணம் உறுதியாயிற்று. பணம் வேண்டுமே? என் செய்வது? பெங்களுரில் உலகத்தமிழ்க் கழகத்தினர், பாவேந்தர் விழாவிற்கு என்னை அழைத்துப் பாராட்டிப் பணப்பேழையும் அளித்தனர். பெற்றுத் திரும்புகையில் ஈரோட்டில் வந்து தங்கினேன். அங்கு என்