பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நண்பர் சு.அ. நடராசன், நண்பர் மணி இருவரும் கூடிப்பேசி, ஒவ்வொருவரும் இவ்வளவு தொகை போட்டு, வேண்டியவர் சிலரிடம் பணம் வாங்கித் திருமணத்தை நடத்தி விடுவது என உறுதி பூண்டனர். அவர்கள் என்னை முழுமையாக உணர்ந்தவர்கள் 'நீங்களும் எங்களுடன் வாருங்கள் என என்னையும் உடனழைத்துச் சென்றனர். வேண்டிய நண்பர்களிடம் விவரத்தைக் கூறி, உதவி வேண்டினர். அவர்களும் மனமுவந்து, செய்து விடுவோம் என அழுத்தமாகக் கூறினர். வெற்றிக்களிப்புடன் மீண்டேன். ஆனால் கடைசி நேரத்தில் நண்பர்கள் கை வரவில்லை. கலக்கமுற்றேன். ஏன் அவர்களிடம் உதவி வேண்டினோம்? என என்னை நானே வெறுத்துக் கொண்டேன். நான் பணியிலிருந்து ஒய்வு பெற்ற சமயமாதலின், பணிக் கொடை (கிராச்சுவெட்டி) வந்து சேர்ந்தது. அதனைக் கொண்டு திருமணம் நடத்தி விட்டேன். தலைமை தாங்குமாறு தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வேண்டினேன் அதே நாளில் பிறிதொரு நிகழ்ச்சிக்கு இசைந் திருப்பினும் அதை ஒத்திப்போடச் சொல்லிவிட்டு, என் வேண்டு கோளை ஏற்றார். என்பால் அன்பும், என் பாடலில் ஈடுபாடும் கொண்டவராதலின் இசைந்தார். 6.9.79 அன்று அடிகளார் தலைமையில் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பாளி திருமணம் அதன் பின் என் மகன் பாரிக்குப் பெண் பார்த்தோம். கவிஞர் மீரா மற்றும் நா. பழநிவேலு என்பவர் வாயிலாகப் பெண் பார்த்தோம். கோவையில் ஒரு பெண்அமைந்தது. மடல்வாயிலாகவே கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது. பெண் முதலாக அனைவர்க்கும் உடன்பாடுதான். ஆனால் தந்தையார் இசைவு தராமையால், வேறிடத்திற் பெண் பார்த்துக் கொள்ளுமாறு எழுதி விட்டனர். நான் என்ன செய்வது? வேறிடத்தில் பெண் பார்த்து, உறுதியும் செய்து விட்டேன். நாளும் குறிக்கப்பட்டு விட்டது. இடையில் பழநிவேலு என்ற நண்பர் வாயிலாகத் தொடர்பு கொண்டு, கோவைப் பெண் வீட்டார் இசைவைப் பெற்றிருக்கிறான் என் மகன். கோவைப் பெண்ணைத்தான் மணம் செய்து கொள்ளுவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டான்.