பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 121 அவர்கள் மறுத்துவிட்ட பின்புதானே வேறிடத்திற் பெண் பார்த்தேன். நானாவேண்டாமென்று சொன்னேன்? என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவன் உறுதிப் பாட்டை முன்னரே சொல்லியிருந்தால், மற்றோரிடத்தில் பெண்பார்த்திருக்கமாட்டேன். உங்கள் வற்புறுத்தலுக்காக நீங்கள் சொல்லுமிடத்தில் திருமணம் செய்தாலும் குடும்பம் நடத்த மாட்டேன்' என்று சொல்லி விட்டான். அதனால் உறுதி செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு விட்டது. பலர் பகைக்கும் வெறுப்புக்கும் ஆளாகினேன். நானே செய்துவிட்ட தவறு, என் மனத்தில் மாறா வடுவாகி விட்டது. பின்னர்த் திருமணம் பற்றிய எம் முயற்சியும் மேற் கொளா திருந்தேன். அதன் பின் என் நண்பர் ஈரோட்டு நடராசன், என் மனத்தை மாற்றிக் கோவைக்கு அழைத்துச் சென்றார். பெண்ணின் பெற்றோர் நா. வேங்கடாசலம், அவர் துணைவி யார் வடிவு- திராவிடர் கழகத்தினர்; பெண்ணுக்குக் கலப்பு மனமே செய்ய வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தனர்: உறவினருடைய ஏளனம், வெறுப்பு எதையும் பொருட்படுத்தாது உறுதியுடன் நின்றனர். குறிப்பாக வடிவு அம்மையாரின் உறுதிப் பாடும் முற்போக்கு எண்ணமும் பாராட்டத்தக்கன. திருமணம் முடிவு செய்யப்பட்டது. தாலி கட்டுவது பற்றிப் பேச்செழுந்தது. சிலர் வேண்டுமென்றும் சிலர் வேண்டாமென்றும் கருத்துரைத்தனர். பெண்ணின் கருத்தை அறிந்து கொள்ள, அப் பெண்ணிடமே கேட்டேன். தாலி கட்டிக் கொள்வது.தனக்கு உடன்பாடன்று எனவும், நீங்கள் விரும்பினால் கட்டிக் கொள் கிறேன் எனவும் மறுமொழி தந்தனள். சரி. அந்த நேரத்தில் பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்யப் ப்ட்டது. திருமணத்திற்கு விடுதலை ஆசிரியர் வீரமணியை அழைக்கும் பொறுப்புப் பெண் விட்டாரிடமும் கலைஞரை அழைக்கும் பொறுப்பு என்னிடமும் ஒப்படைக்கப்பட்டது. * கலைஞர் காரைக்குடிக்கு வருகை தந்த பொழுது, ஒப்புதல் கேட்டேன் எந்தத் தேதி வைத்திருக்கிறீர்கள்?’ என்றார். நீங்கள் சொல்லும் தேதிதான் என்றேன். நான் சொல்லும் தேதி பெண் விட்டாருக்கு ஒத்து வர வேண்டுமல்லவா? அதனால் பெண்