பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 வீட்டாருடன் கலந்து பேசி இரண்டுதேதி குறிப்பிட்டெழுதுங்கள். எனக்கு வாய்ப்புள்ள நாளில் வருகிறேன்' என்றார். பின்பு, பெண் வீட்டாரைக் கேட்டேன். வீரமணி ஒத்துக் கொண்ட தேதியைச் சொன்னார்கள். திசம்பர் 29, கலைஞருக்கு எழுதினேன். அன்பளாவிய அவர்தம் மறுமொழி இதோ! திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் கோபாலபுரம் மு. கருணாநிதி சென்னை - 86. = 7. I2. I 98.3 அன்புள்ள கவிஞர் அவர்களுக்கு, வணக்கம், தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அன்புச் செல்வனின் திருமண விழாவிற்காக 29.12.83 கோவை நகருக்கோ, 1.1.84 அன்று காரைக்குடி வரவேற்பு நிகழ்ச்சிக்கோ வரவேண்டு மென்று எழுதியிருக்கிறீர்கள். 29.12.83 அன்று சென்னையில் துறைமுகத்தில் ஒரு நிகழ்ச்சிக்காகக் கலாநிதி எம்.பி. ஒரு மாதத்திற்கு முன்பே தேதி வாங்கி விட்டார். 1.1.84 அன்று மாவட்டக் கழக மாநாடு இருக்கிறது. கலாநிதி எம்.பி., அவர்களிடம் தங்கள் கடிதம் கிடைத்த அன்றே கூறி, அந்தத் தேதியை மாற்றிக் கொள்ள இயலுமா என்று கேட்டிருந்தேன். எப்படியும் நம் இல்லத்து நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் சென்னைத்துறை முகத்து நிகழ்ச்சியில் சுப்பிரமணியசாமி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களுடன் கலந்து கொள்ள வேண்டுமென்றும், அவர்களுக்குத் தேதியை மாற்றுவதற்கு இயலவில்லை என்றும் கலாநிதி இன்றுதான் தெரிவித்தார். எனக்குத் தங்களுக்கு எப்படிச் சமாதானம் எழுதுவ தென்றே தெரியாத நிலையில் தான் இக்கடிதம் எழுதுகிறேன். தங்களின் விழைவினை நிறை வேற்ற முடியாமைக்கு வருந்து கின்றேன். o தங்கள்அன்புள்ள, மு. கருணாநிதி. கலைஞர் இவ்வாறு எழுதிய பின் நான் என்னசெய்ய இயலும்? பெண் வீட்டார் சொன்ன நாளிலேயே நடத்த முடிவு செய்தேன்.