பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் |123 | என் மகன் மறுத்தான். தேதியை மாற்றுங்கள். கலைஞர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றான். பெண் வீட்டார் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருப்பர். எப்படி நாளை மாற்றுவது? என்றெண்ணி அதே தேதிதான் என்று முடிவு செய்தேன். இவனோ, கலைஞர் வராத வருத்தத்தில் திசம்பர் 27வரை திருமணச் சட்டை தைத்துக் கொள்ள மறுத்து விட்டான். திருமண நாளன்று வாராது மறுத்து விடுவானோ? என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அதனால் இத்திருமணமும் நின்று விடுமோ? என அச்சம் தோன்றிவிட்டது. அவனுக்கு நெருக்கமான மருத்துவர் பழநியாண்டியிடம் சொன்னேன். பழநியாண்டி எனக்கு மகன் போன்றவர். விடுப்பு எடுத்துக் கொண்டு அவரும் அவர் துணைவி சுந்தரியும் பெரு முயற்சி செய்து கோவைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். 1983 திசம்பர் 29இல் மானமிகு. கி. வீரமணி தலைமையில் திருமணம் நடந்தேறியது. தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற வில்லை. என் துணைவியார், வீட்டுக்கு வந்த பின்பு தாலி போட்டு விடலாம் என்றார். கட்ட விரும்பினால் மேடையிலேயே கட்டியி ருக்கவேண்டும். மேடையில் ஒரு நெறி; வீட்டில் ஒரு நெறியா? கொள்கை வழி நடப்பது எனக்காகவா? ஊருக்காகவா? என்றவுடன் அவரும் இசைந்து விட்டார். பலர் வாழ்த்துரைத்தனர். எதிர்பாராவகையில் இருவர் வந்து வாழ்த்தினர். இத்திருமணத்திற் கலந்து கெள்ளக் கலைஞருக்குப் பெரு விருப்பம்இருந்தும் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலவில்லை. அவர் சார்பில் எம்மிருவரையும் சென்று வரப் பணித்துள்ளார்’ எனக்கூறி வாழ்த்தினர். அவ்விருவருள் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன். மற்றொருவர் மு. இராம நாதன். நான் கலைஞரை அழைத்து வரவில்லையே என்று, என் மகன் என் மேல் இன்னும் வருத்தமாகவே இருக்கிறான். கலைஞரவர்கள் தம் சார்பில் பேராளர் இருவரை வரவிடுத்த துடன் அமையாது வாழ்த்தும் எழுதியிருந்தார். அவ்வாழ்த்து இதோ: * s