பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 தாளாளர் என்னைத் தமது இல்லத்திற்கு அழைத்து, கல்வியலு வலர்விடுத்தகமுக்கஅறிக்கையையும் முதலமைச்சருக்கு எழுதப்பட்ட மடலின் படியையும் என்னிடம் காட்டினார். கையொப்பமிட்டோர் யார் யார் எனத் தெரிந்து கொண்டேன். என் மேற் சுமத்தப் பட்டவை வீண் பழிகளே என்றேன். முன்பிருந்த தலைமையாசிரியர்கள் சீனிவாசஐயர், ஆராவமுது ஐயங்கார் என்னைப் பற்றித் தங்களிடம் சொல்லியிருப்பார்களே என்றேன். அதற்குத் தாளாளர் ஆராவமுது ஐயங்கார் உங்களைப் பற்றி, பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் என்று என்னிடம் சொல்லி யிருக்கிறார். உங்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன். கல்வியதி காரிக்கு நான் பதில் எழுத வேண்டுமல்லவா? அதனால் பேருக்கு விசாரணை செய்கிறேன்; நீங்கள் இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். மீண்டும் நான், மாணவர்களைக் கூட அழைத்துக் கேட்டால் என்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே என்றேன். தலைமையாசிரியர் கணேசனிடம் சொல்லியிருக்கிறேன். அவர் மாணவர்களை அனுப்புவார். கேட்கிறேன். என்று கூறி, தாளாளர் விடை கொடுத்தார். பார்ப்பன மாணவர்களைத் தேர்ந்தெடுத்துத் தலைமையாசிரியர் கணேசன் செட்டியார் அனுப்பியிருக்கிறார். தாளாளர்.அவர்களிடம் வினவ, எங்கள் தமிழ் வாத்தியார் ரொம்ப நல்லவர்; அரசிய லெல்லாம் பேச மாட்டார். எங்களைத் திட்டுவார், கண்டிப்பார், அடிப்பார். நன்றாகப் படிக்கச் சொல்லுவார். அவர் எங்களுக்கு அப்பா மாதிரி, தெய்வம் மாதிரி, கவிதையெல்லாம் எங்களை எழுதச்சொல்லமாட்டார். நாங்கள் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் அப்பொழுது அவர் ஏதாவது எழுதுவார் என்றெல்லாம் சொல்லி யிருக்கின்றனர். கல்வியலுவலர் விசாரணை மற்றொரு நாள் மாவட்டக் கல்வியலுவலர் ஐஸ்டிஸ்' என்பவர் பள்ளிக்கு வந்து, தனியறையில்அமர்ந்து, என்னையழைத்து உசாவினார். அவர் : இந்தியெதிர்ப்பு மாநாடு நடத்தினர்களா?