பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 நடந்து கொள்கிறீர்கள்? உங்களைச் சிறைப் படுத்தினால் குடும்பம் என்னாவது?’ என்று பரிவுடன் மொழிந்தார். நான், பூங்கொடிக் காப்பியம் எழுதிய குற்றத்தைத்? தவிர, எக்குற்றமும் செய்யவில்லை. குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. உங்களால் காப்பாற்றப்படாமல், நோயால் இறந்திருந் தால், குடும்பம் என்ன செய்யும்? அதை இப்பொழுது செய்து கொள்ளட்டும் - என்றேன். இப்படித்தான் விதண்டா வாதம் செய்வீர்கள். சரி அப்படி ஏதாவது நடந்து விட்டால் உடனே எனக்குத் தெரிவியுங்கள். நான் வந்து பொறுப்பில் எடுத்து விடுகிறேன். என்று சொல்லிச் சென்றார். நான் அடிக்கடி, புதுக்கோட்டைக்குச் செல்வதுண்டு. செல்லும் பொழுதெல்லாம் உளவறிவோர் என்னைப் பின் தொடர்ந்துள்ளனர். பல முறை தொடர்ந்தும் பயனில்லாமல், அலுத்துப் போய் அவர், தம் நண்பரிடம் என்னய்யா! முடியரசன் என்று ஒரு வாத்தியாரை ஃபாலோ பண்ணச் சொன்னாங்க. நானும் பலதடவை புதுக்கோட் டைக்குப் போனேன். அந்த ஆளு ஆஸ்பத்திரிக்கும் ஸ்டுடியோவுக்கும் போயிட்டு வர்ராறே தவிர, வேற ஒரு எழவையுங் காணோம்' என்று சலிப்புடன் சொல்லியிருக்கிறார். அவர் நண்பர் ஒர் ஆசிரியர், பால்ராசு என்பது அவர் பெயர். அவர் எனக்கும் வேண்டியவர். அனைத்தையும் என்னிடம் கூறிவிட்டார். * சிறை செய்வார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். சிறையிலிருந்து கொண்டே வீரகாவியம்’ என்ற நூலை எழுதி முடித்து விடலாம் என்றும் கோட்டை கட்டியிருந் தேன். ஆனால் கோட்டை தகர்க்கப்பட்டது. பேராயக் கட்சியைச் சார்ந்த - செல்வாக்கு மிக்க - என்னை நன்கு அறிந்த ஒருவர் முயற்சியால் பட்டியலிற்சேர்க்கப்பட்ட என்பெயர்நீக்கப்பட்டது. தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலைமை தாண்டவ மாடியது. யாரைப் பிடிப்பது, யாரை நொறுக்குவது, யாரைக் கொல்வது என்று கண்கால் தெரியாமல், வல்லாண்மை (சர்வாதிகாரம்) தலைவிரித்தாடிய நேரம். வழக்கம் போல், பேராயக் கட்சியினரால், சிறை செய்ய வேண்டியோர் பட்டியலில் என் பெயரும் சேர்க்கப் பட்டது. இரங்கத்தக்கோர் சிலர், தலைமறைவாகி விட்டனர்.