பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 13 I அப்பொழுது கோட்டாட்சித் தலைவராக இருந்தவர் ஆளப்பப் பிள்ளை என்பவராம். அவரை நான் முன்பின் பார்த்ததில்லை. அவர் பன் பெயரை, கவிதைகளை நன்கு அறிந்தவராம். அதனால் அன்பு கருதியோ? பரிவு கருதியோ? குற்றம் அறியேன் என்று கருதியோ? ான் கருதியோஎன் பெயரைஒதுக்கி வைத்து விட்டார் என்று அங்குப் பணிபுரியும் அலுவலர் வாயிலாகப் பின்னர்த் தெரிய வந்தது. இந்நேரத்தில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட கலைஞருக்கு மடல் எழுதினேன். பலர் தடுத்தும் துணிந்து எழுதினேன். பொன், புட மிட்டால் மேலும் ஒளிசிறக்கும், சந்தனம், தேய்க்கத் தேய்க்க மேலும் மணம் பிறக்கும் சங்கு சுட்டாலும் வெண்மை கொடுக்கும். என்று எழுதியிருந்தேன். இம்மடல் அரசின் பார்வைக்குட்பட்டுக் கலைஞரை அடைந்தது. வல்லாண்மையர், அவரை, அவர் குடும் பத்தைப் படுத்திய பாடுகளை நினைத்தாலே நெஞ்சு நடுங்கும். விடுதலை பெற்ற நாட்டின் அருமை பெருமை - களையெல்லாம் அப்பொழுது அறிந்து கொண்டேன். கலைஞர், ஒரு போராட்டச் த்ெதர் என்பதால், அரசுதந்த வேதனைகளில்தம் உள்ளத்தை ஒட்ட விடாது, தனித்து நின்று சித்து விளையாடல் புரிந்து வந்தார். அந்த நிலையிலும் மறுமொழி எழுதினார். மு.கருணாநிதி = சென்னை, தலைவர் . . 26. 2. 76 திராவிட முன்னேற்றக்கழகம் அன்புடையீர், வணக்கம், தங்கள் கடிதம் என் நெஞ்சுக்கு இதமாக இருந்தது. அண்ணாவின் கொள்கைகளுக்கு என்றுமே அழிவில்லை. அந்த உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். - --- அன்புள்ள, மு.கருணாநிதி கலைஞர் சந்திப்பு - is a 1971ஆம் శివాrG, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்காகப் 'பாடுங்குயில்கள்' என்ற துண்ைப் பாட நூலொன்று எழுதிக் கொடுத்தேன். விடுதலைக் குயில் (பாரதியார்) புரட்சிக் குயில் (பாரதிதாசன்) இசைக்குயில் (வேதநாயகம்) மணிக்குயில் (கவிமணி) என்ற தலைப்புகளில் எழுதியிருந்தேன். நான்காண்டுகள் பாடநூலாக