பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 135 செய்து, என்ன? என்ன? என்று பதறிக் கொண்டே கேட்டார். உங்களி டத்தில் இவ்வளவு அன்பு வைத் திருக்கிறாரே!” என வியந்தார். முன்னாள் சட்டமன்றப் பேரவைத்துணைத் தலைவர் கணபதியும் என்.வி.என் சோமுவும் என் பொருட்டு வழக்குரை யாடினர். வழக்கு சனவரி 24க்கு ஒத்திப் போடப்பட்டது. வழக்கறிஞர் கணபதி, நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் யாருக் காவது எழுதிய கடிதங்கள் கிடைக்குமா? அதுவும் அஞ்சலட்டை, அல்லது உள் நாட்டுக்கடிதமாக இருக்க வேண்டும் என்றார். தற்செயலாகப் பாரி நிலையம் சென்றிருந்த நான் அதன் உரிமையாளர் செல்லப்பனிடம் செய்திகளைச் சொன்னேன்: அவர் கோப்புகளைப் பார்த்தார். பத்துப் பன்னிரண்டு மடல்கள் கிடைத்தன. அவற்றைப் பெற்று வந்து கணபதியிடம் கொடுத்து விட்டு ஊருக்கு வந்து விட்டேன். 24ஆம் தேதி சென்னைக்கு வந்து, முறை மன்றத்திலுள்ள கணபதி அறைக்கு வந்து விட்டேன். கருப்புக்குப்பாயும் அணிந்த மூவர் வணக்கம் என்று கூறிய வண்ணம் வந்தனர். நானும் வணக்கம் கூறி மூன்றாவதாக வந்திருப்பவர் யாரெனத் தெரியாது விழித்தேன். அப்பொழுது எனக்குப் பார்வை மங்கியிருந்த நேரமுங்கூட. மூன்றாமவர் என்னைத் தெரிகிறதா?’ என்றார். குரலைக் கேட்டதும் கூர்ந்து நோக்கி சாதிக் பாட்சா எனத் தெரிந்து கொண்டேன். அட ஒ! இந்தக் கோலத்தில் உங்களைப் பார்த்ததில்லை. அதனால் சட்டென்று தெரிந்து கொள்ள முடிய வில்லையென்றேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்காக இந்த ஆடை அணிகிறேன். கலைஞர்தான் என்னையும் வரச் சொன்னார். என்றார். கலைஞரின் அப்பேரன்புக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்? நெகிழ்ந்து விட்டேன். சாதிக் பாட்சா வழக்காடினார். நடுவர் இசுமாயிலுக்கு எழுதப் பட்ட மடலில் உள்ள கையொப்பத்தையும் என் பழைய மடல்களில் உள்ள கையொப்பத்தையும் காட்டி, இரண்டிலும் உள்ள மாறு பாட்டை விளக்கிப் பேசினார். நடுவர்கள் வழக்கைக் கேட்டுக் கொண்டு சனவரி 27க்கு ஒத்திப் போட்டனர். இடையில் இரண்டு நாளே இருந்தமையால் ஊருக்குச் செல்லாமல் தங்கிவிட்டேன்.