பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 மறுநாள் 25ஆம் நாள் இந்தி யெதிர்ப்பு ஊர்வலம், கலைஞர் தலைமையில் பெரியார் திடலிலிருந்து புறப்பட்டது. அவ்வூர் வலத்தில் நானும் கலந்து கொண்டேன். நான் தடுமாறிச் செல்வதைத் தெரிந்து, கழக வழக்கறிஞர் இராதா கிருட்டிணன் ஊர்வல உந்தில் (வேன்) ஏற்றி விட்டார். 27ஆம் தேதி வழக்கு நடந்தது. தலைமை நடுவர் இராம பிரசாது ராவ் என்னிடம் சில வினவினர். நான் விடை தந்தேன். வழக்குத் தள்ளுபடியென்று தீர்ப்புக் கூறப்பட்டது. வழக்குத் தள்ளுபடி யென்றதும் என் வழக்குத் தோற்றுவிட்டதென்று கருதி, கணபதியிடம் இனியென்ன செய்வது? என்றேன். அரசு தொடுத்த வழக்குத் தள்ளுபடியாயிற்று. நமக்கு வெற்றி. நீங்கள் ஊருக்குப் போகலாம்? என்று கணபதி விளக்கிக் கூறினார். எனக்கு ஒரு காசு செலவில்லை. எனக்குத்தான் கணபதி அறையில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. கலைஞர் செய்த இவ்வுதவி, என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில் நிலைத்திருக்கும். எந்த வழக்கிற்கும் கலங்காத கலைஞர் என் வழக்கைக் கண்டு கலங்கி விட்டாரென்றால், என் மேற்கொண்டுள்ள அன்பு அளவிடற் பாற்றோ? இது பற்றி இதழ்களில் வெளி வந்த செய்திகள் கீழே தரப்படுகின்றன, "ஹைகோர்ட் நீதிபதிக்குப் புத்திமதி கூறிக் கடிதம் எழுதிய தமிழ்க் கவிஞர்." சென்னை. பிப் -2 சென்னை ஹைகோர்ட்டில் இரண்டு பேர் களுக்கிடையே ஒரு சிவில் வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கை நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் விசாரித்து வருகிறார். ஒரு நாள் நீதிபதி இஸ்மாயிலுக்கு, டைப் அடிக்கப்பட்டு 'முடியரசன்' என்று கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. தனக்குப் பட்டப் பெயராக ‘கவியரசு அறிவரசன்' என்ற அந்தக் கவிஞர் அதில் குறிப்பிட்டிருந்தார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்க்கிறார். இக்கடிதத்தில் இந்த சிவில் வழக்கை எப்படி விசாரித்து என்ன தீர்ப்பு வழங்கலாம் என்பது பற்றி, அவர் நீதிபதிக்குப் புத்திமதி கூறியிருந்தார். s