பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 137 இவர் மீது அரசாங்க அட்வகேட் ஜெனரல், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இதற்குப் பதிலளித்த கவிஞர் முடியரசன், தான்.அவ்வாறு எந்தக் கடிதமும் எழுத வில்லை என்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் தனக்குத் தெரியாதென்றும் நீதிபதி இஸ்மாயிலையும் தனக்குத் தெரியாது என்றும் பதில் அளித்திருந்தார். நீதிபதிக்கு வந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து தனக்குரி யதல்ல என்றும் யாரோ தனது பெயரை விஷமம் செய்யப் பயன் படுத்தி இருக்கிறார்கள் என்றும் தனது பதிலில் அவர் கூறி யிருந்தார். கோர்ட் அவமதிப்பு வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் தலைமை நீதிபதி ராமபிரசாத் ராவ், நீதிபதி வி. ரத்தினம் ஆகியோர் முடியரசனின் வாதத்தை ஏற்றுக் கொண்டு கோர்ட் அவமதிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்து நீர்ப்பு அளித்தனர். சுயலாபத்துக்காகவும் விஷமத்தனமாகவும் இம்மாதிரி போலிப் பெயர்களில் கடிதம் எழுதுவது சகஜமே என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர். தினமலர் - 3.2.79. இந்தியன் எக்சுபிரசு இதழில் வெளிவந்த செய்தியின் மொழி பெயர்ப்பு: 'உயர் நீதிபதிகள் பிரதிவாதியாகிய திரு.முடியரசனின் எதிர் மனுவை ஏற்றுக் கொண்டு, முதல் ஒப்பு நோக்கிலேயே வழக்கிற்குக் காரணமான கடிதத்திற் காணப்படும் கையொப்பமும் எதிர்மனுவில் காணப்படும் பிரதிவாதியின் கையொப்பமும் ஒன்றல்ல என்று தெரிகிறது. பிரதிவாதி ஒரு சிறந்த அறிஞரும் பொறுப்பு மிகுந்தவருமாக இருப்பதால் அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருக்க முடியாது என்று அறுதியிட்டுக் கூற முடியும். எனவே யாரோ ஒருவர் அவர்பெயரைப் பொறுப் பற்ற முறையில் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியுள்ளார். என்று தீர்ப்பளித்தார்கள். * அந்த வழக்குத் தள்ளுப்படி செய்யப்பட்டது. இவ்வாறே இந்து' என்ற ஆங்கில இதழிலும் செய்தி வெளிவந்தது. காசில்லாமல் நல்ல விளம்பரம்.