பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 14|| அண்ணல் சுப்பிரமணியனாரையும் குறிப்பிட்டு அனைவரையும் உருக வைத்து விட்டார். இவரும் பேராசிரியர் சங்கர வள்ளி நாயகமும் முன்னர் அறிமுகமில்லாதவர்கள். எனினும் தாமே வலிந்து வந்து பாராட்டுரை வழங்கினர். அவர்தம் தமிழ் நெஞ்சங் களின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. சங்கர வள்ளி நாயகம், திறனாய்வு முறையில் பாராட்டுரை வழங்கினார். பிறர் என்னியல்புகளை எடுத்துரைத்தனர். ஏற்புரைக்காக நான் எழுந்தேன். ஏற்புரை எனக் கூறுவதை நான் விரும்பவில்லை. நான் முடியரசன். முடியரசனா ஏற்பது? வேண்டு மானால் எடுப்புரை என்று கூறலாம் எனக் கூறினேன். (அனைவரும் நகைத்தனர்) பொற்கிழியெனக் கூறிப் பத்தாயிரம் கொடுத்தனர். ஏதோ எனக்குப் பத்தாயிரம் கொடுத்து விட்டதாக அவையோர் எண்ணிவிட வேண்டாம். எல்லாம் நாடகம். விழா முடிந்ததும் மேடையிலிருந்துநான் இறங்குமுன்பறித்துக்கொள்வார்கள். என்றேன். இன்று மேடையில் நான் உயிரோடிருந்து உங்கள் பாராட்டு களைப் பெறுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அண்ணல் சுப்பிரமணியனார்தான். முதலில் அவருக்கு நன்றி கூறி வணங்கு கிறேன் என்று உணர்ச்சி வயப்பட்டு விட்டேன் மேடையிலிருந்த படிக்கராமு விம்மி விம்மி அழுது விட்டார். வணக்கத்திற்குரிய அடிகளார் அவர்களே! என்னை நாத்திக்ன் என்று குறிப்பால் உணர்த்தினர்கள் என்ன அளவு கோல் கொண்டு, நாத்திகன் என மதிப்பிடுகிறீர்கள்? கடவுள் இல்லையென்று பாடியிருக்கிறேனா? பேசியிருக்கிறேனா? நீங்கள் முருகனைச் சிவனைக் கடவுள் என்கிறீர்கள். நான்தமிழைக் கடவுள் என்கிறேன். நான் எப்படி நாத்திகனாக முடியும்? எல்லாம் கடவுள் என்று முன்னோர் பாடவில்லையா? 'மூவா முதலே முழுமைபெறுஞ் செம்பொருளே, சாவா வரமெனக்குத்தா எனத் தமிழன்னையை வேண்டிப்பாடியிருக்கிறேன். வரம் யாரிடம் கேட்பது? கடவுளி டந்தானே கேட்க முடியும்? தமிழன்னையை மூவா முதலே எனவும் முழுமை பெறும் செம்பொருளே எனவும் குறிப்பிடுந் தொடர்கள் கடவுட்டன்மையைச் சுட்ட வில்லையா? என நான் கூறியதும் அடிகள் மூரல் பூத்தனர்.